FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Showing posts with label பயிற்சிகள். Show all posts
Showing posts with label பயிற்சிகள். Show all posts

Saturday, February 14, 2026

Paper roses bloom into support for speech & hearing impaired children


14.02.2026
Pune: As Valentine's Day drives a rush for roses across markets, the flower tells story of skill, dignity and community support in Junnar.

For over two decades, Mahananda Hiremath, former principal of the Bansilal Mohanlal Muttha Mukbadhir Vidyalaya, taught hearing and speech impaired students to make roses out of duplex paper, transforming a simple craft into a lasting lesson in self-reliance.

Her initiative began in 2004, when Hiremath received a handmade paper rose as a token of affection during a visit to another school. Curious about how it was made, she carefully dismantled the flower at home and decided to introduce the craft to her own students. "My aim was not merely artistic but practical. I wanted to help students develop skills that could foster confidence and independence," said Hiremath.

She bought the paper, helped the students with cutting work, trained students over 11 years old to make the roses, and managed orders that they received from banks, offices and other establishments throughout the year.

The roses are sold at Rs 5 each, and the proceeds are used to meet the daily needs of residential students at the school. "Over time, what began as a classroom activity grew into a small but steady enterprise for the students. Banks, institutions and social organisations began placing regular orders, especially during festive seasons. During Valentine's Day, there is a surge in orders, and this helps the students not just monetarily but also builds their confidence," she said.

The process was deliberately inclusive. Students who found it difficult to shape petals contributed by preparing stems and green leaves, ensuring that every child participated and learned a skill suited to their abilities. Thousands of flowers were created over the years, each carrying both effort and purpose.

Hiremath retired five years ago, but the work did not end with her tenure. "The students come to my house, where we make the roses together. The flowers are made by cutting duplex paper into petals and attaching them onto a stem made from broomsticks. We often get orders for bouquets, so students use their creativity to design the bouquets out of these handmade flowers," said Hiremath.



Thursday, October 1, 2020

பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

01.10.2020
2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான, பி.எஸ்.சி. நர்சிங், பி.ஃபார்ம், பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வுக்குழு செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய குடியுரிமை கொண்ட மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 - 2021ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்.சி நர்சிங், பி.ஃபார்ம், பி.ஏஎஸ்எல்பி ( செவித்திறன் பேச்சு மற்றும் மொழிக்குறியியல் பட்டப்படிப்பு), பி.பி.டி., பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்.சி. மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி, பி.எஸ்.சி. டயாலிசிஸ் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ஆப்பரேசன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி, பி.எஸ்.சி. க்ரிடிகல்கேர் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரெஸ்பிரேட்டரி தெரபி,, பி.ஓ.டி, பி.ஆப்டம் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://tnhealth.tn.gov மற்றும் www.tnmedicalselection.gov ஆகிய இணையதளத்தில் உள்ள தகவலைப் படித்தபின், விண்ணப்பப் படிவங்களில் கோரப்பட்ட தகவல்களை 01-10-2020 10 மணி முதல் 15-10-2020 5 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டிற்கான கட்டணம் ரூ.400 ஐ ஆன்லைனிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ”the Secretary, Slection Committee, kilpauk, chennai -10” என்ற பெயரில் சென்னையில் பணமாக மாற்றத்தக்கதாக எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலை மூலமாக செலுத்தலாம் என்றும், பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேலே குறிப்பிட்ட இணையதளங்களில் சேர்க்கை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதிய நிகழ்வு விவரங்களை சேர்க்கை முடியும் வரை அவ்வபொழுது கட்டாயமாக பார்த்து அறிந்துகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 9884224648, 9884224649, 9884224745, 9884224746 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பி.எட் சிறப்புக் கல்வி பட்டப் படிப்பில் பாா்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு: இன்று முதல் சோ்க்கை

01.10.2020
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட் சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை, வியாழக்கிழமை (அக்.1) முதல் தொடங்குகிறது.

இது குறித்து பல்கலை. பதிவாளா் கே.ரத்னகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான பி.எட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு, வியாழக்கிழமை (அக்.1), தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பி.எட் சிறப்புக் கல்வி படிப்பானது பாா்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளிலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு பயின்றோா் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபா் 31. மேலும் விவரங்களுக்கு, 044 2430 6617, 84285 75967, 98416 85515 ஆகிய எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Monday, September 28, 2020

‘அசில் இன நாட்டுக் கோழிகள் பெற செப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம்’

26.09.2020
கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் பெறுவதற்கு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழி அபிவிருத்தி திட்டம் 2020-21ஆம் ஆண்டின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 மகளிா் வீதம் 10 ஊராட்சி ஒன்றியத்துக்கு 4ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள பெண் பயனாளிகள் தோ்வு செய்யப்படவேண்டும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழு மகளிா் மற்றும் விதவைகள், மாற்றுத் திறனாளிகள்,திருநங்கைகள், ஆதரவற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் . கிராம ஊராட்சியைச் சோ்ந்த பயனாளிகளில் 30 சதவிகிதத்தினா் கட்டாயமாக ஆதிதிராவிடா் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்களாக இருக்கவேண்டும், முந்தைய நிதி ஆண்டுகளில் விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இல்லாதிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 25அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ்தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒரு நாள் கோழிவளா்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் தொடா்புடைய கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று செப். 30ஆம்தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.


Friday, September 25, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி: கலெக்டர்



மதுரை : ''மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மேம்பாட்டிற்கு திறன் பயிற்சி வழங்க வேண்டும்,'' என, மதுரையில் ஊரக வளர்ச்சி மற்றும் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வழங்கும் திறன் பயிற்சி திட்டங்களை ஆன்லைன் மூலம் துவக்கி கலெக்டர் வினய் தெரிவித்தார்.
நிறுவனம் சார்பில் கள்ளந்திரியில் பால்பண்ணை, மண்புழு உரம் தயாரிப்பு, ஊமச்சிகுளத்தில் ஆடு வளர்ப்பு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. கலெக்டர் பேசுகையில், ''பயிற்சி திட்டங்கள் பயனாளிகளின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.18 முதல் 45 வயதிற்குட்பட்ட யாரும் இந்நிறுவனத்தில் பயிற்சியில் சேரலாம். உணவுடன் பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். மதுரையில் 33 ஆண்டுகளில் இந்நிறுவனம் 24,204 பேருக்கு பயிற்சியளித்துள்ளது.


Friday, December 21, 2018

கை, கால் பாதித்த, காது கேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு புகைப்பட கலை பயிற்சி

20.12.2018, சேலம்: 
சேலம், கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், கை, கால் பாதித்த, காது கேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகையுடன், நவீன புகைப்பட கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் காலம் ஒரு மாதம். கல்வித்தகுதி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி. வயது, 18 முதல், 45 வரை இருக்க வேண்டும். படத்தொகுப்பு, ஒளி, ஒலி அமைப்பு கலை, நவீன தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பெறலாம். முதல்கட்டமாக, ஆண், பெண்கள், 50 பேருக்கு, பஸ் பயண கட்டண சலுகை அட்டையுடன், சேலத்தில் பயிற்சி அளிக்கப்படும். வரும், 26க்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Saturday, December 15, 2018

சினிமா, 'டிவி' வேலைவாய்ப்பு : மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி

14.12.2018
திருவள்ளூர்: திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளில் ஈடுபடும் வகையில், நடைபெறும் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் பயிற்சி வகுப்புகளில், மாற்றுத்திறனாளிகள் சேர விண்ணப்பிக்கும்படி, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து, வேலைவாய்ப்பு சார்ந்த இலவச திறன் பயிற்சிகளை வழங்க உள்ளது.ஒரு மாத காலம்இப்பயிற்சி மூலம் சினிமா, தொலைக்காட்சி, போட்டோ ஸ்டூடியோ, பத்திரிகை மற்றும் செய்தி தாள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் பெறலாம்.பயிற்சியின் முடிவில், சுயதொழில் செய்வதற்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.'மல்டி மீடியா' மற்றும் 'ஆவிட், எப்.சி.பி.,' படத்தொகுப்பு, ஸ்டில் போட்டோகிராபி ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.ஒரு மாதம் கால பயிற்சி வகுப்பில், 18 முதல் 45 வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் சேர்ந்து பயன்பெறலாம்.எட்டாம் வகுப்புக்கு மேல் படித்த கை, கால் மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் தகுதியானவர்கள்.விருப்பமுள்ளோர், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலை எடுத்து கொள்ளவும்.விண்ணப்பிக்கலாம்அவற்றுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு, இன்று முதல், 29ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2766 2985 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

Thursday, September 13, 2018

காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கான பரதநாட்டிய கலை சிறப்பு பயிற்சி முகாம்

13.09.2018
திருப்பூர்:திருப்பூரில் இயங்கி வரும், சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம் சார்பில், சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில், டாக்டர். விஜய் மாதவன், மாணவியருக்கு பயிற்சி அளித்தார். அவர் பேசியதாவது: பரதநாட்டியம் என்பது காலங்காலமாக வாய்மொழியாக கற்றுக் கொடுக்கப்பட்ட கலை. இதனை ஏட்டில் எழுதி, ஒரு பாட புத்தகம் போல் வடிவமைக்கும் முயற்சியே 'நாட்டியோ கிராஃபி'. பரதநாட்டிய அசைவுகளை எல்லாம் எழுத்து மூலமாக சுருக்கமாக கற்றுக்கொள்ள உதவும் ஒரு நுட்பம். மாணவியர் பாடங்களை நினைவு கூற உறுதுணையாக இருக்கும். இதைக்கற்று கொள்ள, வயது வரம்பு தேவையில்லை. மாணவர்கள் அடவுகள் ஏற்கனவே கற்றவராக இருத்தல் அவசியம். காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளும் கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு, அவர் பேசினார். சாய் கிருஷ்ணா நுண் கலைக்கூட இயக்குனர் சந்தியா சங்கர் நன்றி கூறினார்.


Tuesday, August 14, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

13.08.2018
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளன.

திருப்புத்துார் ட்ரூபா, நேஷனல் அகாடமி ஆப் இன்டஸ்டீரியல் நிறுவனங்கள் சார்பில் தையல் பயிற்சி அளிக்கப்படும். நிறுவனத்திற்கு 60 வீதம் 120 பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 5 ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். காதுகேளாத, வாய்பேசாத நபர்கள், இரு கைகள் நல்ல நிலையில் ஒரு கால் மட்டும் பாதிக்கப்பட்டோர், மிதமான மனவளர்ச்சி குறையுடையோராக இருப்போர் விண்ணப்பிக்கலாம்.

திருப்புத்துார் நேஷனல் அகாடமி ஆப் இன்டஸ்டீரியல் நிறுவனம் சார்பில் குளிர்சாதன பெட்டி மற்றும் குளிர்சாதனம் பழுது நீக்க பயிற்சி, விருந்தோம்பல் உதவியாளர் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பயிற்சிக்கும் 20 பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 8 ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்றோர் விண்ணப்பிக்கலாம். காதுகேளாத, வாய்பேசாதோர், இரு கைகள் நல்ல நிலையில் கால்கள் பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பூவந்தி ராஸ் அகாடமி சார்பில் உதவி செவிலியர் பயிற்சி அளிக்கப்படும். நாற்பது பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 10 ம் வகுப்பு தேர்ச்சியுற்றோர் விண்ணப்பிக்கலாம். இரு கைகள் நல்ல நிலையில் ஒரு கால் பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.விரும்புவோர் ஆக., 25 க்குள் ஸ்மார்ட் சிவகங்கா செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு 04575 242025 ல் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் லதா தெரிவித்தார்.

Tuesday, August 8, 2017

Certificate Course on Assistive Technology

Date: August, 2017 – April, 2018
Venue : Faculty of Disability Management and Special Education (FDMSE) , Coimbatore, Tamil Nadu | India.

The Persons with disabilities such as visual, hearing, speech, cognitive and Locomotor have unique and diverse needs for everyday activities whether it is education or employment.

Assistive Technology support to increase, maintain, or improve functional capabilities of individuals with disabilities.

This course provides first hand experience in dealing with such assistive technology for persons with disabilities. Special Educators, General Educators, Physiotherapists, Occupational therapists, Speech therapists, Social Workers, Care takers, Parents of Children with Disabilities and Volunteers can undergo this course.

Course Objective:

The candidate after course is expected to learn about a wide range of Assistive Technology application in the home, school, workplace and community environments which suits the individual needs of persons with disabilities.

Contact Details

For more information, contact

Dr. S. Parween
Asst. Prof. in Special education
FDMSE, RKMVU

Email : office@vucbe.org, fdmse@vucbe.org
Phone : +91 7502732223 / +91 9843344350

Wednesday, July 26, 2017

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி முகாம்

26.07.2017, ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான இரண்டு மாத இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை, 10:00 மணிக்கு, செங்கோடம்பள்ளம், திண்டலில் உள்ள குருசாமி கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. எம்.எஸ்., ஆபீஸ், இன்டெர்நெட், டைப் ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஷ், ஆளுமை மேம்பாடு, சில்லறை வர்த்தகம் குறித்து இலவச பயிற்சி வழங்கப்படும். ஒன்பதாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்கள், 18 முதல், 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், காது கேளாதோர், பார்வை குறைபாடு உடையோர் பங்கேற்கலாம். கல்வி தகுதி சான்று, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்று, ரேஷன் கார்டு அசல் மற்றும் நகல், நான்கு போட்டோ கொண்டு செல்ல வேண்டும். விண்ணப்பித்து தேர்வு பெறுவோருக்கு, 'யூத் பார் ஜாப், 65/111 பிக் பஜார் தெரு, கோவை - 641 001' என்ற விலாசத்தில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது தங்குமிடம், உணவு இலவசம். இதை கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Saturday, June 10, 2017

1st International Excellence Award 2017 for Service to Disabilities

Association of Special Educators and Allied Professionals® and Association of Disabled People® in Association with Para Sports Foundation ® are organizing the 1st International Excellence Award 2017 for Service to Disabilities on 23rd August 2017 at 7:00 pm India International Center, New Delhi

Nominations are now expected from countries such as USA, UK, OMAN, UAE, NEPAL, BANGLADESH, AFGHANISTAN, NAMIBIA, and ZAMBIA. This is in addition to an envisioned Pan India involvement.

Nominations Invited From:
  • Individuals
  • Institutions
  • Organizations

Nomination Categories
  • Special Needs
  • Intellectual Disabilities/Physical Disabilities
  • Counseling (School based/community based)
  • School Psychology

Award Categories
  • Life Time Achievement
  • Social contribution
  • Sports
  • Culture
  • Awareness and Advocacy
  • Accessibility
  • Employability
  • Empowerment
  • Creative Expression as an Aid
  • Young Achievers

Sub Categories
  1. Special Needs
  • Autistic Spectrum Disorder (ASD)
  • General Learning Disability (GLD)
  • Specific Learning Disability (SLD)
  • Cerebral Palsy (CP)
  • Down Syndrome (DS)
  • Developmental Disorders
   2. Intellectual and Physical Disabilities
  • Mental Retardation (MR)
  • Hearing Impairment including Deafness
  • Vision Impairment including Blindness
  • Speech and Language Impairment
  • Any Other
   3. Counseling
  • School Based
  • Clinical
  • Community

Last date for Nominations: 30th June 2017: All nominations should reach on the prescribed format by the date given.

More Details : Application and Awards Details (258KB, PDF)

For any queries and concerns, please write to: Mr. Hector Ravinder Dutt Hon. Secretary, ASEAP
Phone: 09811645220
Email: secretary.aseap@gmail.com

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு அரிய இலவச வேலை வாய்ப்பு பயிற்சி


பயிற்சியின் நோக்கம்மாறுப்பட்ட திறமைசாலிகளை புதிய தொழில் நுட்பக் கல்வியை கொண்டு உலகம் போற்றும் திறமைசாலிகளாக மாற்றுவது.

பயிற்சி பிரிவுகள்
  • கணிப்பொறியின் அடிப்படை கல்வி (Basic Computer)
  • ஆங்கிலத்தில் சரளமாக பேச ( English Communication)
  • ஆளுமை வளர்ச்சி பெற (Personality Development)
குறைந்தபட்ச கல்வித்தகுதி

கல்வி: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல்
வயது: 18-35

பயிற்சி காலம்
மூன்று மாதங்கள்

பயிற்சியின் முக்கிய அம்சங்கள்
  • இலவச பயிற்சி
  • இலவச தங்குமிடம் மற்றும் உறைவிடம்
  • சத்தான உணவு
  • வேலை வாய்ப்பிற்கு உதவி
  • தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள்
  • மாணர்வகளுக்கு தனிப்பட்ட கவனம்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Samarthanam Trust for the Disabled
Plot No. 120, Sri Bhuvaneshwari Nagar,
1st Main Road, Velachery, Chennai – 600 042.
Phone : +91 8122704708
Email : sundar@samarthanam.org

Sunday, February 19, 2017

First learning, stitching, drafting school for hearing impaired opens

Amritsar, February 18

A skill development institute for stitching and drafting was inaugurated by Dr Inderjit Kaur and Padma Shri Vikramjit Singh Sahney at the Pingalwara complex at Manawala. This will be the first exclusive institute in Punjab providing training in stitching and drafting to the hearing impaired in sign language along with normal persons.

This has been made possible through the combined efforts of Dr Inderjit Kaur, president, All-India Pingalwara Charitable Society and Padma Shri Vikramjit Singh Sahney, Chairman, Sun Foundation.
Dr Inderjit Kaur has always been in the forefront for promoting the cause of people with disabilities and already has three schools for deaf children functioning in three districts of Punjab. Surya Kiran is a leading project of Sun Foundation for imparting vocational and skill development training to the poor girls and the women and has a large number of centres in Punjab, Haryana, Rajasthan and Delhi. Sahney said his mother was extremely attached to the cause of Pingalwara and her wish has resulted in the first project for the hearing impaired in Punjab.

Training for the deaf persons is being provided through a qualified teacher proficient in sign language. The school has 16 students in its first batch and includes nine deaf students. Teaching with modern aids and well planned curriculum will help the students to find good job opportunities. The entire training is free of cost.

On this occasion coordinator Sun Foundation, Baljeet kaur Johal, Jai Singh, Administrator, Manawala Pingalwara, R P Singh Director of Pingalwara school and other were present.

Sunday, November 20, 2016

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி மையம் துணைவேந்தர் திறந்து வைத்தார்

20.11.2016
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் காஜாமலை வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான தையல் பயிற்சி, கணினி மூலம் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தையல் பயிற்சி மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி எந்திரம் கையாளுதல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து துணைவேந்தர் பேசுகையில், "சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களுக்காகவே பல்வேறு புதிய பயிற்சி வகுப்புகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பி.சி.ஏ. பட்டதாரி படிப்பு நமது பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.79 லட்சம் ஒதுக்கியுள்ளது" என்றார். விழாவில் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், மாற்றுத் திறனாளிகள் மைய தலைவர் (பொறுப்பு) பிரபாவதி மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவருடைய பெற்றோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Monday, October 10, 2016

‘Computer training changed lives of disabled students’

09.10.2016, NAGPUR: When computers were a relatively new concept in Nagpur during the 1990s,Pramod Bhalerao, a physically challenged professor from Government Institute of Science, was in much demand, on account of his mastery over the machine. He decided to dedicate his expertise and vast knowledge of computers for the welfare of disabled and handicapped youths from the city.

A senior life member of Computer Society of India (CSI) and Fellow of Institute of Electronics and Telecommunications Engineers (IETE), Bhalerao has trained nearly 500 disabled youths that helped them secure jobs. After being nominated as an expert member by Department of Electronics and Accreditation of Computer Courses (DOEACC), an autonomous scientific society under the Indian Ministry of Communications and Information Technology, Bhalerao helped open 15 training centres in 1990s. The retired lecturer in physics spoke to TOI about his life, struggle and success. Excerpts from the interview:

Q. How did it all start?

A. Since I had a problem in one leg, I was well aware of the problems faced by those with disabilities and always wanted to do something for them. The opportunity came when computers were introduced in the city. I got a rare chance to learn computers and use my knowledge for the benefit of needy persons. I suggested opening a computer lab for the disabled students at our college. My idea was well supported by the then director and support staff. However, funds were a major crunch. At that time, I got a chance to participate in an international conference at Vancouver in Canada as a resource person, where I put forward my concept of providing computer training to the disabled. It was liked by all and I received USD 20,000 aid from the United Nations to open a computer guidance centre for the disabled.

Sunday, August 28, 2016

'மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி தேவை'

24.08.2016,
மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு, மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில கௌரவத் தலைவர் பால கிருஷ்ணன், கோரிக்கை மனு அனுப்பி யுள்ளார்.

மனுவில், தமிழ்நாடு அரசு அலுவல கங்களில் தாற்காலிக பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரமாக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க, ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நன்கு பயிற்சி அளித்து, அவர்களது திறமை, உடல் தன்மைக்கேற்ப வேலை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, June 8, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையுடன் பல்லூடகப் பயிற்சி



மதுரை, 05 June 2016
மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடகப் பயிற்சி, புகைப்படப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் உள்ள 16 வயதில் இருந்து 40 வயதுக்கு உள்பட்ட கை-கால் குறைபாடுடைய மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடகப் பயிற்சி, புகைப்படப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலமாக ஒரு மாதம் இப் பயிற்சி அளிக்கப்படும்.

இப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் உள்ள, தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் ரூ.1000 (ஒரு மாதத்துக்கு) உதவித் தொகையாக வழங்கப்படும்.

தகுதியான நபர்கள் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

பயிற்சியில் சேர ஜூன் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.