FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, November 10, 2013

போலி அட்டைகளை தடை செய்ய மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

09.11.2013, திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டத்தில் உண்மையான மாற்றுத் திறனாளிகளுக்கு இடையே ஊடுருவியுள்ள போலியான மாற்றுத் திறானாளிகளின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய கோரி நேற்று காலை அம்மையார்குப்பத்தில் மாநில மறுமலர்ச்சி மாற்றுத் திறானளிகள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த அம்மையார்குப்பத்தில், போலியான மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய வலியுறுத்தி நேற்று காலை மாநில மறுமலர்ச்சி மாற்றுத் திறனாளிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு துவக்கிவைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளாக அரசு மருத்துவர்களால் போலியாகச் சான்று பெற்றுள்ளவர்களின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூலியாக, மத்திய அரசு நிர்ணயித்த ரூ.148 வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளைப் பணிதல பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்யாமல், நன்றாக இருப்பவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று பொய்யாக அடையாள அட்டை வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத் திறனாளிகளின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஆர்கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலாயுதம், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா சுந்தரவேல், ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து, மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Thanks to

No comments:

Post a Comment