FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, August 4, 2025

காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்களுக்கு விதைப்பந்துகள் தயாரிக்கும் சிறப்புப் பயிற்சி முகாம்



22.07.2025
பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் மேல்நிலைப் பள்ளியில், காடுகளை உருவாக்கும் அரிய நோக்குடன் விதைப்பந்துகள் தயாரிக்கும் சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பள்ளித் தலைமை ஆசிரியை ஜான்சி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், பள்ளித் தாளாளர் ஜேக்கப், ஓய்வு பெற்ற தாசில்தார் முத்துசாமி, மற்றும் ஹெலன்ஜாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஹரிஹர செல்வன், பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன், "ஒரு கோடி விதைப்பந்துகள் உருவாக்கும்" இலக்குடன் செயல்பட்டு வருகிறார். அவர் மாணவர்களுக்கு, விதைப்பந்துகளை எப்படித் தயாரிக்க வேண்டும், அதன் அவசியம் என்ன, மற்றும் காடு வளர்ப்பில் அதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். திருமாறனின் உரையை, சைகை மொழி பெயர்ப்பாளர் சுபா, மாணவ, மாணவிகளுக்குப் புரியும் வகையில் சைகை மொழியில் மொழிபெயர்த்து, அவர்களும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவினார்.

இந்தச் சிறப்பான நிகழ்வில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் எனப் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பசுமைப் படை பொறுப்பாசிரியை பாலின்ஜோன்ஸ் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்திருந்தார்.

காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் காடு வளர்ப்பு போன்ற சமூகப் பொறுப்புமிக்கப் பணிகளில் ஆர்வம் காட்டியது, எதிர்காலச் சமுதாயத்திற்கு நம்பிக்கையூட்டும் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.

No comments:

Post a Comment