FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, August 13, 2025

காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் - ஓசூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்


 
 
 

 ஒசூர் 12.08.2025 
காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் - ஓசூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது.

மேலும், இந்தக் கூட்டமைப்பின், 40வது ஆண்டு ரூபி ஜூப்ளி விழா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்கத்தின் 15 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பி பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.

மேலும் இந்த மாநாட்டில் கூட்டமைப்பின் மாநில தலைவர் பழனிசாமி மற்றும் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் உட்பட மாநிலத்தின் 38 மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிகளான காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சலுகைகள் முழுமையாக சென்று அடையாமல் உள்ளது. எனவே அனைத்து காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

காது கேளாதோர் வாய் பேச இயலாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 500 ரூபாயாக இருந்ததை 1500 ரூபாய் என உயர்த்தி மாநில அரசு அறிவித்தது. இதனை வரவேற்றுள்ள நிலையில், இந்த உதவித்தொகை சிறு சிறு நிபந்தனைகளின் காரணமாக குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே பயனடையும் நிலையில் அனைவரும் பயனடையும் வகையில் நிபந்தனைகளை நீக்க வேண்டும் .. என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநில அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு தெரிவிக்கையில்,

தற்பொழுது காது கேளாதவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை 1500 ரூபாய் யாருக்குமே சென்று அடையவில்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத சிறு சிறு நிபந்தனைகளால் பயனடைய இயலாத நிலை உள்ளது.

எனவே அறிவிக்கப்பட்டுள்ள 1500 ரூபாய் உதவித்தொகை அனைத்து காது கேளாதவர்க்கும் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

மேலும், அண்டை மாநிலங்களில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண தனிமனிதன் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கொண்டு வாழ்க்கை நடத்துவது சிரமமாக உள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகளான காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் அன்றாட வாழ்க்கைக்கு கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

எனவே, உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, காது கேளாதோர் கூட்டமைப்பின் சார்பில், தமிழக அரசை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

பேட்டி : கே சுரேஷ் பாபு, சேர்மன், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment