FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Showing posts with label பார்வையற்றோர் செய்திகள். Show all posts
Showing posts with label பார்வையற்றோர் செய்திகள். Show all posts

Sunday, November 1, 2015

கடின உழைப்புக்கு முன் உதாரணம் மெழுகுவர்த்தி தயாரிப்பில் அசத்தும் பார்வையற்றோர்

31.10.2015, புதுடெல்லி: தங்களால் உலகத்தை பார்க்க முடியாவிட்டாலும், தாங்கள் செய்யும் பொருட்களால் உலகமே வெளிச்சத்திற்கு வருவதற்காக உழைக்கின்றனர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். தீபவாளி பண்டிகையை முன்னிட்டு, மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட லோதி சாலை அருகிலுள்ள லால் பகதுர் சாஸ்திரி சாலையில் உள்ளது பார்வையற்றோர் நிவாரண சங்கம். இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் உள்ளனர். இவர்கள் தங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்காக மெழுகுவர்த்தி செய்யும் தொழிலை செய்கின்றனர்.

இதுகுறித்து பார்வையற்ற நிவாரண சங்க திட்ட இயக்குனர் டேவிட் கூறியதாவது: இந்த மையம் பார்வையற்றோருக்கான மறுவாழ்வு மையமாகவும், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இங்கு பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், அரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300 பேர் உள்ளனர். இதில் 210 பேர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், மற்ற 90 பேர் சுய தொழில் செய்பவர்கள். எங்களின் முக்கியமான தொழில் மெழுகுவர்த்தி செய்வது. ஆண்டு முழுவதும் மெழுகுவர்த்திகள் செய்யப்படும். மண் குவளை மெழுகுவர்த்தி உட்பட சுமார் 90 ரகங்களில் இங்கு மெழுகுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. மூலப் பொருட்களை வாங்கி வருவது, பேப்பர்களை வெட்டித் தருவது போன்ற வேலைகள் மட்டுமே வெளி மார்க்கெட்டுகளில் கொடுக்கப்பட்டு வாங்கப்படுகிறது. மற்றபடி மெழுகுவர்த்தி முழுவதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளாலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

மெழுவர்த்தி செய்வதற்கு மாற்றுத்திறனாளிகளை கொண்டே, பார்வையற்றோருக்கு கற்றுத்தரப்படுகிறது. இதனால் அவர்களின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்துள்ளது. சுய வேலைகளில் ஈடுபடுபவர்கள் முழு நேரமாகவும், மாணவர்கள் பகுதி நேரத்திலும் மெழுகுவர்த்தி செய்யும் வேலையை விரும்பி செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் விற்பனை கண்காட்சி நடப்பதால், மெழுகுவர்த்தி செய்யும் வேலை எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். சிறியதாக தொடங்கிய மெழுவர்த்தி செய்யும் தொழில் தற்போது நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. கண்காட்சியின் போது பல்வேறு பகுதிகளிலிருந்து பலரும் வந்து வாங்கிச் செல்கின்றனர். மற்ற மாநிலங்களில் இதுபோன்ற விற்பனை கண்காட்சியை நடத்த பலர் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் பல மாநிலங்களில் இதுபோன்ற விற்பனை கண்காட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். வெளிநாட்டு பயணிகளும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் இங்கு வந்து மெழுகுவர்த்தி வாங்கிச் செல்கின்றனர். மாநில அரசு சார்பில் கண்காட்சிக்கு தேவையான சில உதவிகள் கிடைத்தாலும், ஏற்றுமதி செய்வதற்கும், மற்ற மாநிலங்களில் கண்காட்சி ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் மட்டுமே இங்குள்ள நூற்றுக்கணக்கான பார்வையற்றோரின் எதிர்காலம் சிறப்பாக அமையும். தீபாவளி பண்டிகை நெருங்குவதால், மெழுகுவர்த்தி தயாரிப்பு பணி மும்மரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, July 9, 2015

வைரலாக பரவும் மாற்றுத் திறனாளி பாடகரின் வீடியோ



09.07.2015 ராஞ்சி
ஜார்கண்ட் மாநில த்தை செர்ந்தவர் தும்பா குமாரி 9 (வயது 16). இயற்கையாக வே நல்ல குரல்வளம் மிக்கவர். 2 நாட்களுக்கு முன் அவர் பாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி 2,250,348 பேர் பார்த்து உள்ளனர். 100161 லைக்குகள் கிடைத்து உள்ளன. பேஸ்புக்கில் 1118647 பகிரபட்டு உள்ளது.

அவரது பாடல் கேட்பவரை மெய்மறக்க செய்கிறது. மூத்த இசையமையப்பாளர் ரவீந்திர ஜெயின் தும்பாவுக்கு வாய்ப்பு வழங்க முன்வந்து உள்ளார்.பின்னணி பாடகர்கள் ஷிரயா கோஷல், மற்றும் அங்கீத் திவாரி ஆகியோர் தங்களால் இயன்றவகையில் உதவி செய்வதாக கூறி உள்ளனர்.

அரியானாவை சேர்ந்த ஒருவர் உதவ உறுதியளித்து உள்ளார்.தும்பா ராஞ்சியில் உள்ள பரஜ்கிஷோர் பார்வையற்றோர் பள்ளியில் படித்து வருகிறார்.இவருடன் மேலும் 13 பார்வையற்ற மாணவிகள் படித்து வருகின்றனர்.

இது குறித்து தும்பா கூறும் போது எனது பாட்டை பெரிய இசையமைப்பாளர்கள் பின்னணி பாடகர்கள் பாராட்டி உள்ளனர் நான் மிக மகிழ்ச்சியாக அடைகிறேன்.அவர்களுக்கு ந்ண்ரி தெரிவிக்க அவர்களை நான் சந்திக்க வேண்டும்.

Monday, June 15, 2015

மாற்றுத் திறனாளிகள் அனுதாபத்தை எதிர்பார்க்கக் கூடாது: ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்

15.06.2015, சென்னை 
பிறரிடம் எந்த விதமான அனுதாபத்தையும் மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண் பெனோ ஜெஃபைன் தெரிவித்தார்.
இவர் தற்போது இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து பெனோ ஜெஃபைன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
ஐ.எஃப்.எஸ். தேர்வில் இதுவரை பார்வையற்றோர் யாரும் வெற்றி பெற்றதில்லை என்பதால் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் எனத் தீர்மானித்தேன். அதில் இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற தேர்வுகளுக்கு தினமும் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை படிக்க வேண்டும் என்று சிலர் கூறுவதுண்டு.
தினமும் 5 மணி நேரம்...
என்னைப் பொருத்தவரை எத்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதைவிட படித்த தகவல்களை எந்தளவுக்கு நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்பதே முக்கியம். எனவே, ஒரே நாளில் 10 புத்தகங்களைப் படிப்பதை விட, ஒரு புத்தகத்தை 10 முறை படிப்பது சிறந்தது. அதாவது திரும்பத் திரும்ப படிக்கும்போது அதில் உள்ள விஷயங்கள் மனதில் நன்கு பதியும்.
இந்தத் தேர்வுக்கு படிப்பவர்கள் தினமும் 5 மணி நேரம் திட்டமிட்டு சிறந்த புத்தகங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். பழைய வினாத்தாள்களையும் தவறாமல் படிப்பது அவசியம். இதை நான் தொடர்ந்து கடைப்பிடித்ததால் வெற்றி வசமானது. நான் எந்தப் புத்தகத்தை விரும்புகிறேனோ அதை எனது தாய் மேரி, எனக்கு பலமுறை படித்துக் காட்டுவார். என்னைச் சுற்றி இருந்தவர்களை என்னை ஒரு மாற்றுத் திறனாளியாகவே நினைக்கவில்லை. என் வெற்றிக்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
முன் மாதிரி: வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் தனி ஆளாகப் போராடி வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாதான் என் முன்மாதிரி.
கணினியில் ஜாஸ் (ஒஹஜ்ள்) என்ற மென்பொருளைப் பயன்படுத்தி நன்றாக தட்டச்சு செய்ய பயிற்சி மேற்கொண்டது குடிமைப்பணித் தேர்வை எழுத மிகவும் உதவியாக இருந்தது.
அகில இந்திய வானொலி, தமிழ், ஆங்கிலத் தொலைக் காட்சிகளில் அன்றாடச் செய்திகளை தொடர்ந்து கேட்டது, பொது அறிவு தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவியது. போட்டித் தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகள் வெற்றி பெற, பிறரைக் காட்டிலும் அதிகம் உழைக்க வேண்டும். பிறரிடம் எந்தவிதமான அனுதாபத்தையும் மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்க்காமல் வாழ்வில் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதைத்தொடர்ந்து, கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பெனோ ஜெஃபைனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், அகாதெமியின் இயக்குநர் பூமிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Friday, May 22, 2015

"மாற்றுத்திறனாளி சகோதரனால் முதலிடம் பெற்றேன்': பார்வைத்திறன் இழந்த மாணவி பெருமிதம்

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டேன். என் பெற்றோர் இறக்கும்போது 7 மாதக் குழந்தையாக இருந்த என்னை, என் இரண்டாவது சகோதரர் வெங்கடேசன்தான் வளர்த்து வருகிறார்.
அவரும் என்னைப் போலவே பார்வைத்திறன் குறைபாடு உடையவர். அரக்கோணம் தாலுகாவில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மளிகைக் கடையில் நாளொன்றுக்கு ரூ.120 சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.
அதைக் கொண்டு அவர் குடும்பத்தையும், என்னையும் கவனித்து வருகிறார்.
அவர், மாணவர் பருவத்தில் இருந்தபோது படிப்பதற்கு இதுபோன்ற சிறப்புப் பள்ளிகள் இல்லாத காரணத்தினால் அவரால் படிக்க முடியவில்லை. அதனால் என்னைப் படிக்க வைக்க விரும்பினார்.
எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புகிறேன். எங்களைப் போன்று வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் ஏழைகளை கல்வித் தரத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் முன்னேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார்.
இவர் பெற்ற மதிப்பெண்
தமிழ்- 91, ஆங்கிலம் 89, கணிதம்- 96, அறிவியல்-99, சமூகஅறிவியல்-96.
இதே பள்ளியைச் சேர்ந்த எம்.முனீஸ்வரி 459 மதிப்பெண் பெற்று மாநில அளவில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

Thursday, May 21, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்– சாதித்துக் காட்டிய கண்பார்வையற்ற கடவுளின் குழந்தைகள்

 21.05.2015, சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கண்பார்வையற்ற மாணவ, மாணவிகள் பலரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். 

கண்பார்வையற்ற நிலையிலும் தேர்வினை சிறப்பாக எழுதி முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்: 
1. ஆண்டாள் எம். - சென்னை - 477 மதிப்பெண்கள் 
2. மணிமேகலை எஸ். - விருதுநகர் - 474 மதிப்பெண்கள் 
3. கிரிஜா எஸ். - விருதுநகர் - 468 மதிப்பெண்கள் 
4. மொகம்மது அதுனன் பி. - திருவள்ளூர் - 466 மதிப்பெண்கள் 
5. தனலட்சுமி பி. - புதுச்சேரி - 465 மதிப்பெண்கள் 
6. அனுசுயா வி. - விருதுநகர் - 464 மதிப்பெண்கள் 
6. அதிபன் வி. - கோவை - 464 மதிப்பெண்கள் 
7. தனலட்சுமி எம். - சேலம் - 462 மதிப்பெண்கள் 
8. மகாலட்சுமி பி. - விருதுநகர் - 459 மதிப்பெண்கள் 
8. முனிஸ்வரி எம். - தெற்கு சென்னை - 459 மதிப்பெண்கள் 
9. பூபதி சி. - திருவள்ளூர் - 458 மதிப்பெண்கள் 
10. பிட்சைக்கண்ணன் எஸ். - விருதுநகர் - 457 மதிப்பெண்கள் 
10. ராதிகா கே. - திருச்சி - 457 மதிப்பெண்கள் 
10. பிரேம்குமார் ஏ. - சென்னை - 457 மதிப்பெண்கள்

Thursday, March 19, 2015

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ்

19.03.2015
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தங்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடத்திய தொடர் போராட்டம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி நியமனத்துக்கான உத்தரவை வழங்க வேண்டுமென பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் 10-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமைச் செயலகத்தில்... தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, தலைமைச் செயலகம் எதிரே பார்வையற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் இரண்டு பேர் தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதன் பிறகு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் தமிழக அரசின் சார்பில் சமூகநலம்-மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் 9 அம்சக் கோரிக்கைகளில் 4 அம்ச கோரிக்கைகளை அரசுத் தரப்பில் ஏற்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

தனியார் கல்லூரி, பள்ளிகளில் வேலைக்கு உத்தரவாதம், வேலையில்லாத பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்பதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னையிலும், திருச்சியிலும் கடந்த 10 நாள்களாக நடத்தி வந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக பார்வையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர் போராட்டம்: பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அனைத்து மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடனும் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை எனவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தங்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், தங்களின் போராட்டம் தொடர்வதாக ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Friday, March 13, 2015

பார்வையற்ற பட்டதாரிகள் மறியலில் தள்ளு -முள்ளு


Thursday, March 12, 2015

அவர்களுக்குத் தேவை கருணை அல்ல !

11.03.2015
பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு 9.3.2015 முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

“கர்ணகொடூரமாக நடந்துகொள்ளும் இந்த அரசிடம் கருணையை நாம் எதிர்பார்க்க முடியாது. இதை பார்வையற்ற மாணவர்கள் பிரச்சனையாக மட்டும் பார்த்து ஒரு இடத்தில் முடங்கிவிடக் கூடாது. இது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் பிரச்சனை. அனைத்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்களை இப்போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரட்ட வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்ச நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என்று எழுச்சியுடன் பேசினார்.

பார்வையற்ற இந்த மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என்று கோருகின்றனர். இதை செவிகொடுத்து கேட்க தயாரில்லாத போலீசோ அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நைச்சியமாக மிரட்டுகிறது.

பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் என்ன என்று கேட்போது அவர்கள் சொன்னது “புதிதாக ஒன்றும் கேட்கவில்லை சார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்ன கேட்டோமோ அதையேதான் இப்போது கேட்டு போராடுகிறோம்’’ என்றார்.

இந்த அரசால் செய்ய முடியாத அளவுக்கு அப்படி என்ன கேட்டுவிட்டார்கள்?

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் தர வேண்டும் என்று கோருகிறார்கள். இதை செய்ய முடியாதா? செய்ய முடியாது என்பதல்ல செய்யக்கூடாது என்பதுதான் இந்த அரசின் நோக்கம்.

நீண்ட நாட்களாக ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அவற்றை நிரப்பி வேலையற்ற படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையும், அதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வியும் கொடுக்கலாம். அப்படி செய்துவிட்டால் அரசுப்பள்ளி, கல்லூரிகள் தரமாகிவிடும், தனியார் பள்ளியை / கல்லூரியை நோக்கிச் செல்லும் மாணவர்கள் அரசுப் பள்ளி, கல்லூரியை நோக்கி திரும்பி விடுவார்கள். அப்புறம் தனியார் கல்வி முதலாளிகள் எப்படி கல்லாக் கட்ட முடியும். அவர்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே! இதை செய்யத் துணிவார்களா? அதனால்தான் தங்கள் எஜமானின் விசுவாசத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்குவதில் தப்பில்லை என்று பார்வையற்ற மாணவர்களின் வாழ்வை பறித்து வருகிறது இந்த அரசு.

  • ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • B.Ed பட்டம் பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களில் 550 பட்டதாரிகளை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்த வேண்டும்
  • முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியுடைய 200 பார்வையற்ற பட்டதாரிகளை உடனடியாக சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • உதவிப் பேராசியருக்கான தகுதித் தேர்வு (NET Or SET) முடித்து நீண்டகாலமாக காத்திருக்கும் தகுதி உடைய பார்வையற்ற 100 பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உடனடியாக சிறப்பு நேர்காணல் மூலம் நிரப்பப்பட வேண்டும்.
  • பார்வையற்றோருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு ஒன்றினை நடத்துவதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கென கண்டறிந்துள்ள காலிப்பின்னடைவு பணியிடங்களை (9000 பணியிடங்கள்) உடனடியாக ஒரு சிறப்பு தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.
  • உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க தமிழக அரசு உடனடியாக குரூப் A மற்றும் B பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
  • பார்வையற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படுகின்ற ஊர்தி பயணப்படியினை மத்திய அரசு வழங்குவது போல் ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
  • படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வேலையற்றோர் நிவாரண உதவித் தொகையினை ரூ.1000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
  • தற்போது பார்வையற்ற கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை இரட்டிப்பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  • 01.04.2003 க்கு பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்த பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கும் சம பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளித்து முழு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முழு ஓய்வூதியம் வழங்க ஆவன செய்தல் வேண்டும்.
  • பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுத வரும் எழுதுனர்களுக்கு ரூபாய் 300/- வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்.

பார்வையற்ற மாணவர்களின் மேற்கண்ட கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.

கடந்த 2013-ம் ஆண்டு இதே போல் போராடியபோது அரசு அவர்களை நடந்திய விதம் மிகவும் கொடூரமானது. போராட்டத்தின் போது கைது செய்து சென்னைக்கு ஒதுக்குப் புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தன்னந்தனியாக விட்டு விட்டு வருவது என்பதை ஒவ்வொருமுறையும் செய்து மாணவர்களை உயிரோடு கொல்ல முயன்றது. அதில் பல நேரங்கள் இரவு நேரங்கள்.

அதுமட்டுமல்ல பார்வையற்ற மாணவிகளை போலீசு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கின. அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு பணியாத பார்வையற்ற மாணவர்கள் உறுதியாக போராடினார்கள். ஆனால் இறுதியில் அவர்கள் கண்ட பலன் வெறும் வாக்குறுதிகள்தான். இப்போதும் அதே வழிமுறைகளில் பார்வையற்ற மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு எத்தனிக்கும்.

நாம் என்ன செய்யப்போகிறோம். வேடிக்கை பார்ப்பது அவமானம். போராடும் பார்வையற்ற மாணவர்களுக்கு துணை நிற்க வேண்டியது கருணையல்ல, நமது கடமை.

- வினவு

சென்னை கடற்கரை ரயில்நிலையம் அருகே பார்வையற்ற பட்டதாரிகள் மறியல்: 100 பேர் கைது


தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை கடற்கரை ரயில்நிலையம் அருகே பார்வையற்ற பட்டதாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். B.Ed பட்டம் பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களில் 550 பட்டதாரிகளை பட்டதாரி ஆசியர்களாக பணி அமர்த்த வேண்டும். பார்வையற்றோருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு ஒன்றினை நடத்துவதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க தமிழக அரசு உடனயாக குருப் A மற்றும் B பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்து வருகின்றனர்.

புதன்கிழமை காலை தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை கடற்கரை ரயில்நிலையம் அருகே பார்வையற்ற பட்டதாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Monday, October 27, 2014

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவசக் கல்வி: நேத்ரோதயா நிறுவனர் கோரிக்கை

சென்னை,27 October 2014
ஆதிதிராவிடர், பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிகளில் இலவசக் கல்வி அளிக்க பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று நேத்ரோதயா நிறுவனர் சி.கோவிந்தகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

"நேத்ரோதயா' பார்வையற்றோர் சிறப்புப் பள்ளியின் 12-ஆம் ஆண்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சி.கோவிந்தகிருஷ்ணன் பேசியது:

பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும்,

Friday, August 22, 2014

| பார்வையற்றவர், மனவளர்ச்சி குன்றியோர் விளையாட 'கேரம் போர்டு' கண்டுபிடிப்பு Dinamalar

பார்வையற்ற மாணவர்கள் தேர்வு எழுத கூடுதலாக 40 நிமிடம்

22.08.2014
யூ.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடம் வழங்கப்படும் என மகத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்கிற யூ.பி.எஸ்.சி மத்திய அரசு பணிக்கான காலி இடங்களிளை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வில் பார்வையற்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வு எழுதுவதால் தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகியவற்றில் தனித்தனியே கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்படும்.

இதன் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடங்கள் தேர்வு எழுத கிடைக்கும் என்றும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 21, 2014

அரசுப் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு: முறைப்படுத்த வேண்டுகோள்

சென்னை, 20 August 2014
அரசுப் பணிகளில் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் செயலாளர் ஆனந்த் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முதுநிலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள், இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களில் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பின்னர், அதுதொடர்பான அரசாணை டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அவற்றில் முழுவிவரங்கள் இடம்பெறவில்லை. இது பார்வையற்ற பட்டதாரி மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

அரசுத் துறை காலிப் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கான 2 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் இந்தப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்றார் அவர்.