Showing posts with label TDWAD NEWS. Show all posts
Showing posts with label TDWAD NEWS. Show all posts
Sunday, November 16, 2025
Wednesday, April 19, 2017
Wednesday, March 29, 2017
WOMEN'S DAY CELEBRATION FOR DEAF AND TDWAD AWARD TO BEST SOCIAL WORKER
Ln.S.தனராஜ், Executive Direct, Sharon (Society for help and Rehab of Needy) அவர்கள் சிறப்பு உரையாற்றினார். அறம் மகிழ் அறக்கட்டளையில் காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் குழு பிரிவு செயலாளர் D.சுதா என்பவருக்கு சிறந்த சமூக சேவையர் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது. மேலும் பெண் உறுப்பினர்களுக்கு இலவச புடவையை வழங்கினோம் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ந.ரமேஷ்பாபு அவர்கள் காதுகேளாத பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் உரிமையை பற்றி விளக்கி உரையாற்றினார். செயலாளர் H.நாகேந்திரன் மற்றும் உதவி செயலாளர் G.ராஜூ அவர்கள் நன்றி உரையாற்றினார்கள்.
Monday, November 16, 2015
Monday, October 12, 2015
Thursday, October 8, 2015
லால்குடி, புள்ளம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
திருச்சி, 08 October 2015
திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் புள்ளம்பாடி வட்டாரங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக். 10, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.
லால்குடி வட்டாரத்துக்கான முகாம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக். 10-ம் தேதியும், புள்ளம்பாடி வட்டாரத்துக்கான முகாம் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அக். 17-ம் தேதியும் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறும்.
எலும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான மருத்துவச் சான்றுகளை வழங்குவர்.
தேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்று, தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
எனவே, இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 3, குடும்ப அட்டை அசல் ஆகியவற்றுடன் தங்கள் வட்டாரத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள், அடையாள அட்டை அசல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று மாதாந்திர உதவித் தொகை மற்றும் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் புள்ளம்பாடி வட்டாரங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக். 10, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.
லால்குடி வட்டாரத்துக்கான முகாம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக். 10-ம் தேதியும், புள்ளம்பாடி வட்டாரத்துக்கான முகாம் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அக். 17-ம் தேதியும் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறும்.
எலும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான மருத்துவச் சான்றுகளை வழங்குவர்.
தேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்று, தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
எனவே, இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 3, குடும்ப அட்டை அசல் ஆகியவற்றுடன் தங்கள் வட்டாரத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள், அடையாள அட்டை அசல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று மாதாந்திர உதவித் தொகை மற்றும் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Friday, February 13, 2015
Friday, January 2, 2015
Sunday, December 7, 2014
Friday, October 17, 2014
Tuesday, October 14, 2014
Wednesday, October 8, 2014
Friday, January 10, 2014
Wednesday, January 8, 2014
Friday, December 27, 2013
CONCESSION CERTIFICATE - கவனிக்க வேண்டியவை:
இந்த சலுகை சான்றிதழ் அரசு ஒரு சான்றிதழ் மருத்துவர் கையெழுத்திடப்பட
வேண்டும் மற்றும் உங்கள் உள்ளூர் அரசாங்க மருத்துவமனை ENT துறை தலைவர்
இருக்கும் என்பதை தயவு செய்து கவனிக்க. சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறை
மாறுபடுகிறது, ஆனால் முதன்மை செயல்முறை ஒரு ஆடியோ கிராம் மற்றும் அரசு
மருத்துவமனையில் இல் ENT துறை ஒரு audiologist மூலம் சான்றிதழ் உள்ளது. அது
ஒருமுறை அவர் இந்த படிவத்தை பூர்த்தி பின்னர் குமாஸ்தாக்கள் அது மூன்று
டாக்டர்கள் கையெழுத்து வாங்கி தருமாறு செய்வேன். செயல்முறை முடிக்க ஒரு
வாரம் ஒரு நாள் எடுத்து கொள்ளலாம்.
Thanks to
Veeramani Sekar தமிழ் காது கேளாதோர் கருத்துக்களம் ( Tamil Deaf Community )
Sunday, September 15, 2013
உலக காதுகேளாதோர் தினம் 2013
உலக காதுகேளாதோர் தினம் 2013
அன்புடையீர்! வணக்கம்.
நமது சங்கத்தின் சார்பாக உலக காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு 29.09.2013 ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள திறன் வெளிப்படுத்தும் (நகைச்சுவைப்போட்டி, நடிப்புப்போட்டி, நடனப்போட்டி) போன்ற பல போட்டிகளிலும் கலந்து கொண்ட உங்கள் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை தட்டிச் செல்ல தங்களது பெயர்களை முன்பதிவு செய்ய கடைசி தேதி 22.09.2013 இடம்: TMSSS Empowerment Centre, Room No.212, First Floor, Near RC School, Bharathiyar Salai, Trichy-1.
SMS மூலமாக பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
7373383825
8754896891
8122232763
குறிப்பு:
பெயர் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது பெயர், முகவரி, செல்பேசி எண் போன்றவற்றை தெளிவாக SMS செய்யவும்.
நன்றி!

இப்படிக்கு,
திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர்
நல முன்னேற்ற சங்கம்,
Wednesday, July 10, 2013
"பெற்றோர்களின் கவனத்திற்கு"
குறையொன்றும் இல்லை மலைமூர்த்திக் கண்ணா...
தங்களின் குழந்தைகள் காது கேட்க்க வில்லையென்றாலும் பேசமுடியாமல் இருந்தாலும் அவர்களை கட்டாயம் காது கேளாதோர் பள்ளியில்(சிறப்பு பள்ளி ) மட்டுமே சேர்க்கப்படவேண்டும் .ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் என்று சில விபரம் அறிந்த பெற்றோர்களே சாதாரண பள்ளியில் சேர்கின்றனர், பல பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும், தங்களது குழந்தைகளின் குறைகளை வெளிப்படுத்த தயங்கியும் சாதாரண பள்ளியிலேயே சேர்க்கப்படுகின்றனர்..
சாதாரண பள்ளி ஆசிரியர்களால் இவர்களுக்கு பாடம் கர்ப்பித்து தருவது என்பது இயலாத காரியம் , இவர்களுக்கு என்று சிறப்பு பள்ளி மற்றும் சிறப்பு ஆசிரியர்களால் மட்டுமே காதுகேளாத குழந்தைகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படமுடியும்,
இப்படிப்பட்ட மாற்றுதிரனாளிக்களின் நலனையும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படவேண்டும் அவர்களின் திறன் மேன்படவேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் அரசு சுமார் 30 பள்ளிகளுக்கும் மேல் நிறுவப்பட்டு உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்ப்பது இல்லை, மாற்றுதிரநாழி மாணவர்களை சாதாரண பள்ளியில் சேர்ப்பதனால் அவர்களுக்குள் உள்ள பல திறமைகள் வெளிக்கொண்டு வர முடியாமல் , அப்படிப்பட்ட குழந்தைகள் தனிமைபடுத்தி விடக்கூடிய நிலை வந்து விடும், கோவையில் RS.புரம் பகுதியில் மாநகராட்சி காதுகேளாதோர் சிறப்புப்பள்ளி இயங்கி வருகிறது , இதில் ஆரம்பத்தில் 500 மாணவர்கள் பயிற்சிபெற்று வந்தனர் ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஒன்று முதல் பத்தாம்வகுப்புவரையில் வெறும் 35 மாணவர்களே பயிற்சி பெற்றுவருகின்றனர். இந்த நிலை நீடித்தால் இப்படி பட்ட சிறப்பு பள்ளிகள் மூடக்கூட்டிய நிலை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
Thanks to Penmai.
Tuesday, July 9, 2013
திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக TNPSC-II Group-ல் வெற்றி பெற்றவன் மாற்றுத்திறனாளி (Deaf) குமார்
குமார் என்பவர் மாற்றுத்திறனாளி (Deaf) சிறுவயதில் காதுகேளாதோர் பள்ளியில் படித்தான். பிறகு
அனைத்து மாணவர்கள் பயிலும் பள்ளியில் சமமாகப் படித்தான். அவனுடைய அப்பா சாதாரண
ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். அவன் பகலில் கல்லூரிக்கும், மாலை முதல் இரவு வரை
ஹோட்டலில் வேலை செய்தான். அப்பாவுக்கு மிகவும் உதவி செய்தான். இந்த சூழ்நிலையில்
அவன் B.Sc முடித்தான். பிறகு M.Sc முடித்தான். பிறகு முழு நேரமாக அப்பாவுக்கு உதவியாக ஹோட்டல்
வேலை முழுவதுமாக செய்து கொண்டிருந்தான்.
ரமேஷ்பாபு என்பவர் ஒரு நாள்
குமாரை சந்தித்து TNPSC Exam யைப் பற்றி பேசினார். உன்னால்
வெற்றி பெறமுடியும் முயற்சி செய் என்று பேசினார். அவனும் முயற்சி செய்தபோது
முதலில் தோல்வி அடைந்தான். ரமேஷ்பாபு என்பவர் குமாரிடம் திரும்புவும் பேசினார். நீ
முயற்சி செய்துகொண்ட இருக்கவும்
கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்றார். அதே போல் அவனும் தொடர்ந்து முயற்சி செய்து TNPSC IV Group –ல் வெற்றி பெற்றான். பிறகு விடாமுயற்சியால் TNPSC II Group –ல் வெற்றி பெற்றான். திருச்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகள்
அனைவரும் பெருமையாக நினைக்கின்றனர். அதே போல் மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களும்
நமக்கு குறை உள்ளது என்று கருதாமல் குமாரைப் போல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே
இருக்கவேண்டும்.
Friday, May 31, 2013
இயற்கை மரணம்
திட்டத்தின் சுருக்கம்:
மாற்றுத் திறனாளிகளுக்கு இயற்கை மரணம் நேரிட்டால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.15,000/- வழங்கப்படும்.திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:
மாற்றுத் திறனாளிகள் நல வாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள்
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:
இறப்புச் சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரிய அடையாள அட்டை
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்:
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்:
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409
FINANCIAL ASSISTANCE ON THE NATURAL DEATH OF A DIFFERENTLY ABLED PERSON:
| 1. | Gist of the Scheme | A sum of Rs.15,000/- is given as assistance on the Natural Death of a Differently Abled person. |
| 2. | Eligibility Criteria | Any Differently Abled person holding Identity card issued by the Welfare Board for the Differently Abled. |
| 3. | Whether form of application is prescribed | Yes. Available with District Differently Abled Welfare Office. |
| 4. | Certificates to be furnished | Death Certificate, Legal Heir Certificate and Identity card issued by the Welfare Board for the Differently Abled. |
| 5. | Officer to whom the application is to be submitted | District Differently Abled Welfare Officer |
| 6. | Grievances if any to be addressed to | State Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road, Thousand Lights, Chennai-600 006. Phone No. 28290409 |
மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்
மாற்றுத்திறனாளிகள்
வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது.
இதுபற்றி வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அளித்த விளக்கம் இங்கே...
மாற்றுத்திறனாளி முதலில் அரசு மருத்துவரிடம் மாற்றுத்திறனாளிக்கான உறுதி
சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம் குறைபாடுகள்
கொண்டவர் என்பது கட்டாயம் இருக்கவேண்டும்.?
அந்த வாகனத்தை தவிர, வேறு வாகனத்தை அவர்கள் ஓட்டக்கூடாது. மாற்றுத்திறனாளியின் கை, கால்களில் எந்த குறைபாடுகளும் இல்லாமல், காது
மட்டும் கேட்காமல் இருந்தாலும் லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. ஆனால், கருவி
பொருத்தினால் கேட்கும் திறன் இருக்கும் என்றால், அவர்களுக்கும் சில
சோதனைகள் செய்தபின்பு லைசென்ஸ் வழங்கப்படும். லைசென்ஸில் இவர்கள் காது
கேட்கும் கருவி பொருத்தியவர் என்பதும் குறிப்பிடப்படும்.
மாற்றுத்திறனாளி முதலில் அரசு மருத்துவரிடம் மாற்றுத்திறனாளிக்கான உறுதி
சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம் குறைபாடுகள்
கொண்டவர் என்பது கட்டாயம் இருக்கவேண்டும். நாற்பது சதவீதத்துக்கும் கீழ்
மாற்று திறனாளியாக இருப்பவருக்கும் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் சில
விதிகள் உண்டு.
முதலில் அவர் வாகனத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்பு ஓட்டிக்காட்ட
வேண்டும். சிக்னல் அல்லது வாகனத்தை நிறுத்த வேண்டி வந்தால், அவரால் கால்
ஊன்றி பேலன்ஸ் செய்து நிற்க முடிகிறதா? வாகனத்தின் எடையை அவரால்
தாங்கிக்கொள்ள முடிகிறதா? என்பதற்காகத்தான் இந்த டெஸ்ட்டுகள். இந்த
டெஸ்ட்டுகளில் பாஸ் ஆன பின்புதான் பழகுனர் உரிமம் வழங்கப்படும். இந்த
விதிமுறைகள் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.
நாற்பது சதவீதத்துக்கு மேல் குறைபாடுகள் உள்ள மாற்றுதிறனாளிகள், இரண்டு
சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஓட்ட விரும்பினால், அராய்
(ஏ.ஆர்.ஏ.ஐ) அனுமதி வாங்கிய நிறுவனங்களில், அவர்கள் சுலபமாக வாகனம்
ஓட்டுவதற்கு ஏற்றதுபோல எளிமையாக மாற்றங்கள் செய்து கொண்டுவர வேண்டும்.
அப்படி மாற்றி அமைத்த வாகனங்களில் கூடுதலாக ஏதாவது பாகம் அவர்கள் வசதிக்காக
சேர்த்து இருக்கலாமே தவிர, வாகனத்தில் உள்ள எந்த பாகத்தையும் நீக்கி
இருக்கக்கூடாது.
இரண்டு சக்கர வாகனங்களை அராய் அனுமதி அல்லாமல், வேறு எங்காவது மெக்கானிக்
செட்டில் மாற்றி அமைத்து வந்தால், கண்டிப்பாக அவர்களுக்கு லைசென்ஸ்
வழங்கப்பட மாட்டாது. அராய் அனுமதி வாங்கிய எந்த நிறுவனம் வாகனத்தை மாற்றி
அமைத்ததோ அந்த நிறுவனத்திடம் சான்றிதழ் பெற்று வருவது அவசியம். வாகனம்
வாங்கும்போதே மாற்றுத்திறனாளியின் பெயரில்தான் வாங்கி இருக்க வேண்டும்.
லைசென்ஸ் கொடுக்கும்போது வாகனத்தின் எண் குறிப்பிட்டுத்தான் லைசென்ஸ்
வழங்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)






















