FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

அரசாணை

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
Year - 2014

1. மாற்றுத் திறனாளிகள் நலன்- உச்ச நீதி மன்ற உத்தரவு மற்றும் சென்னை உயர்நீதி மன்ற இடைக்கால உத்தரவுகளின்படி அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிபடுத்துதல் - மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்கள் நிரப்புதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.
https://docs.google.com/file/d/0ByJObgdNFJarVDFGUGtHSXJTOUU/edit
G.O Ms.No. 10 Dt: March 04, 2014

Year - 2012

1. மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற் பயிற்சி நிலையங்களில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்டந்தோறும் 75 மாற்றுத் திறனாளிகளுக்கு அளித்தல் - உணவு மற்றும் விடுதி வசதி தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்தித் தருதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு

https://docs.google.com/file/d/0ByJObgdNFJarVDFGUGtHSXJTOUU/edit
G.O Ms.No. 34 Dt: March 16, 2012 

2. மாற்றுத் திறனாளிகள் நலன் - செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு காதுக்கு பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் (Behind the Ear Hearing Aids) வழங்குதல்- நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.  

G.O Ms.No. 33 Dt: March 16, 2012

3.மாற்றுத் திறனாளிகள் நலன் -2011-2012 ஆம் நிதியாண்டில் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோலால் இயங்கும் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.2.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது. 


G.O Ms. No. 30 Dt: March 14, 2012 

4. மாற்றுத் திறனாளிகள் நலன்- 2011-2012 ஆம் நிதியாண்டு -பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான 5 ஆரம்பநிலை பயிற்சி மையங்களை தொடர தொடராணை மற்றும் 01-01-2012 முதல் 20 ஆரம்பநிலை பயிற்சி மையங்களை புதியதாக தொடங்குதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை 
https://docs.google.com/file/d/0ByJObgdNFJarRjhXNWcyeUx4d00/edit
G.O Ms. No. 28 Dt: March 14, 2012 

5. மாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் செய்வது தொடர்பாக கொள்கை நெறிமுறை உருவாக்க குழு அமைத்தல்- ஆணை வெளியிடப்படுகிறது. 
  G.O Ms. No. 19 Dt: March 05, 2012

6. மாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண நிதி உதவித் தொகை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் பெயரில் தன் வைப்புக் கணக்கு துவங்க அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

7. மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களை 2011-2012 ஆம் நிதியாண்டில் தொடர்ந்து செயல்படுத்திட - ரூ.1.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

8. மாற்றுத் திறனாளிகள் நலன்- தங்களைத் தாங்களே பாரமரித்துக் கொள்ள இயலாத 60ரூ மற்றும் அதற்கு மேல் மனவளர்ச்சி குன்றியோரின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் வகையில் வருமான வரம்பை கருத்தில் கொள்ளாமல் கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை 2011-12 ஆண்டிற்கு கூடுதல் நிதி
G.O Ms. No. 13 Dt: February 17, 2012
9. மாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க தலைமைச் செயலரின் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 01 Dt: January 02, 2012


Year - 2011
 
1. மாற்றுத் திறனாளிகள் நலன்- அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களை களைய அரசுச் செயலாளர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அவர்களின் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைத்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 74 Dt: December 27, 2011
2. 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய ஆண்களுக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்களும் , 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கென தனியாக தொழிற் பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்களும் டிசம்பர் 2011 முதல் புதியதாக தொடங்குதல்- ரூ.76,72,000/-நிதி
G.O Ms. No. 70 Dt: December 09, 2011
3.மாற்றுத் திறனாளிகள் நலன் - 2011-2012 ஆம் நிதியாண்டு - 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான ஏழு இல்லங்களுக்கு திட்டத் தொடரணையும் ரூ.62,49,600/- நிதி ஒப்பளிப்பு செய்தல் -ஆணை வெளியிடப்படுகிறது.

G.O Ms. No. 69 Dt: December 09, 2011

4. மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகளுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெட்டிக்கடை வைக்க நபர் ஒன்றுக்கு ரூ.5,000/- அரசு மான்யமாக வழங்குதல் - 2011-2012-ம் ஆண்டுக்கான திட்டத் தொடராணை- ரூ.3.95 இலட்சம் செலவினம் ஒப்பளிப்பு-ஆணை

Special Casual Leave for celebrating International Differently Abled Day on December 3 
G.O. NO.72, Dt: 26.05.2009



No comments:

Post a Comment