FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, November 15, 2020

செவிப்புலன் தொடர்பில் பள்ளிகளில் பாலர்களுக்கு கூடுதல் ஆதரவு

 
13.11.2020
முதன்­மு­றை­யாக காது கேளாத பிள்­ளை­க­ளுக்கு கல்வி அமைச்­சின் பாலர் பள்ளி ஒன்று கூடுதல் ஆத­ரவு வழங்­க­வுள்­ளது.

அடுத்த ஆண்டு முதல் செயல்­ப­டத் தொடங்­கும் இந்­தப் பாலர் பள்­ளி­யில் சைகை மொழி கற்­பிக்­கப்­படும். செவிப்­பு­ல­னில் மித­மான பாதிப்பு முதல் கடும் பாதிப்பு வரை­யி­லான நிலை­யில் உள்ள மாண­வர்­கள் இப்­பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர்.

இளம் வய­தி­லேயே சிங்­கப்­பூர் சைகை மொழி­யில் அடிப்­படை மொழித் தேர்ச்­சி­நி­லையை இவர்­கள் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­பது இப்­பு­திய திட்­டத்­தின் இலக்கு.

இந்த ஆத­ரவு கிட்­டு­வ­தால், கேட்­கும் திற­னு­டைய அவர்­க­ளின் நண்­பர்­க­ளைப் போலவே காது கேளாத சிறார்­களும் அதே பாடத்­திட்­டத்­தைக் கற்க முடி­யும்.

இதற்­கா­கவே சைகை மொழி ஆசி­ரி­யர் ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­து­டன் பேச்சு, மொழி தொடர்­பில் சிகிச்சை அளிக்­கும் நிபு­ணர்­க­ளின் சேவை­யை­யும் பிள்­ளை­கள் பெற்­றுக்­கொள்­ளும் வசதி உண்டு.

அங் மோ கியோ­வில் உள்ள மேஃபிளவர் தொடக்­கப்­பள்­ளி­யில் இந்­தப் புதிய பாலர் பள்ளி அமை­ய­வுள்­ளது.

ஆண்­டுக்கு 120 பிள்­ளை­கள் பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர். காது கேளாத ஏழு முதல் 10 பிள்­ளை­கள் ஒவ்­வொரு நிலை­யி­லும் 2022ஆம் ஆண்டு முதல் பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர்.

“இத்­த­கைய ஆத­ர­வால் நம் கல்வி அமைப்­பு­ மு­றை­யின்கீழ் மேலும் சிறந்த வழி­யில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்க முடி­யும்,” என்­றார் கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங்.


விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி பள்ளியில் வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி

13.11.2020
விருத்தாசலம் : விருத்தாசலம் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் சார்பில் ஆதரவற்றோர் பள்ளிகள், ஆசிரமங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி பள்ளியில் வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் மணிகண்டராஜன் தலைமை தாங்கினார். பாதுகாப்பு மைய முதன்மை செயல் அதிகாரி பானுமதி மணிகண்டராஜன் முன்னிலை வகித்தார். அதில், 45 சிறப்பு மாணவர்களுக்கு பட்டாசு, இனிப்புகள் வழங்கினர்.திருக்கோவிலுார் ஹன்னா ஜான் ஊனமுற்றோர் ஆசிரம், விருத்தாசலம் வள்ளலார் குருகுலத்தில் உள்ள சிறுவர் மற்றும் முதியவர்கள் உட்பட75 பேருக்கு இனிப்புகள், பட்டாசுகள், வேட்டி, சேலை வழங்கப்பட்டன.

ஆசிரம பணியாளர்கள், ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். மைய உறுப்பினர்கள் ஸ்டாலின், பார்த்தசாரதி, வினோத் உட்பட பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.