13.11.2020
முதன்முறையாக காது கேளாத பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சின் பாலர் பள்ளி ஒன்று கூடுதல் ஆதரவு வழங்கவுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் இந்தப் பாலர் பள்ளியில் சைகை மொழி கற்பிக்கப்படும். செவிப்புலனில் மிதமான பாதிப்பு முதல் கடும் பாதிப்பு வரையிலான நிலையில் உள்ள மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்படுவர்.
இளம் வயதிலேயே சிங்கப்பூர் சைகை மொழியில் அடிப்படை மொழித் தேர்ச்சிநிலையை இவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது இப்புதிய திட்டத்தின் இலக்கு.
இந்த ஆதரவு கிட்டுவதால், கேட்கும் திறனுடைய அவர்களின் நண்பர்களைப் போலவே காது கேளாத சிறார்களும் அதே பாடத்திட்டத்தைக் கற்க முடியும்.
இதற்காகவே சைகை மொழி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பேச்சு, மொழி தொடர்பில் சிகிச்சை அளிக்கும் நிபுணர்களின் சேவையையும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் வசதி உண்டு.
அங் மோ கியோவில் உள்ள மேஃபிளவர் தொடக்கப்பள்ளியில் இந்தப் புதிய பாலர் பள்ளி அமையவுள்ளது.
ஆண்டுக்கு 120 பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கப்படுவர். காது கேளாத ஏழு முதல் 10 பிள்ளைகள் ஒவ்வொரு நிலையிலும் 2022ஆம் ஆண்டு முதல் பள்ளியில் சேர்க்கப்படுவர்.
“இத்தகைய ஆதரவால் நம் கல்வி அமைப்பு முறையின்கீழ் மேலும் சிறந்த வழியில் அனைவரையும் உள்ளடக்க முடியும்,” என்றார் கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங்.
No comments:
Post a Comment