FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, March 5, 2022

சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

 


03.03.2022 கருப்பூர்:

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனமும், சேலம் மறு வாழ்வு நிறுவனமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு முகாமை சேலம் 3 ரோட்டில் உள்ள மறுவாழ்வு நிறுவன வளாகத்தில் நடத்தின. சேலம் மறுவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் வாசுகி விஜயகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்நலத்துறையின் பேச்சு பயிற்சி மற்றும் செவித்திறன் நிபுணர் ஸ்ரீதேவி, சேலம் பேச்சு பயிற்சி மற்றும் செவித்திறன் பரிசோதனை மையத்தின் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். முகாமில் மாற்றுத்திறனாளிளுக்கு பயிற்சியும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. 


செவித்திறன் பாதித்தவர்களுக்கு ஸ்மார்ட் போன்: விண்ணப்பம் வரவேற்பு

28.02.2022
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஸ்மார்ட் போன் இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 18 வயது, அதற்கு மேற்பட்ட இளநிலைக் கல்வி பயிலும் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கும் திட்டம் உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்போர், மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்வி, பணி, சுயதொழில் ஆகியவை தொடர்பான சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் மார்ச் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.வருமான உச்சவரம்பு ஏதுமின்றி இத்திட்டத்திற்கு உரிய விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படுகிறது.எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் பெற விண்ணப்பித்து பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Friday, March 4, 2022

ரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி

20.02.2022
மயிலாடுதுறை: குத்தாலத்தில் ரயில் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பொன்மலையைச் சேர்ந்தவர் ராஜு,30. காதுகேளாத மாற்றுத்திறனாளி. பெயிண்டர் ஆன இவர் பொன்மலை ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ராஜ கோபாலபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த இவர் அங்கேயே தங்கி பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை ராஜு ராஜகோபாலபுரம் ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




இன்ஸ்டாகிராமில் இணைந்த வாய் பேச முடியாத ஜோடிக்கு கோலாகலமாக நடந்த திருமணம்!


ஆன்லைன் யுகத்தில் தினமும் ஆயிரம் காதல் கதைகள் சோசியல் மீடியா மூலமாக முளைக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் துளிர்விடும் முகம் தெரியாத காதல்கள் அனைத்தும் மணவறையை சென்று அடைவது கிடையாது. ஆனால் வாய்பேச முடியாத ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல், கல்யாணத்தில் முடிந்துள்ளது. மனதை உருக வைக்கும் இன்ஸ்டாகிராம் காதல் கதை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானாவில் உள்ள ஜகிதியா மாவட்டத்தின் ராய்கல் மண்டலத்தைச் சேர்ந்த அத்ரம் லதா என்கிற ஜோதி, ஆந்திரப்பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலைச் சேர்ந்தவர் அருண். இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி வந்துள்ளனர். ஆரம்பத்தில் நண்பர்களாக பரஸ்பரம் பழக ஒருவரைப் பற்றி, ஒருவருக்கு நன்றாக புரிதல் வந்துள்ளது. புரிதலின் அடுத்தகட்டம் என்ன காதல் தான். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த சிறிது காலத்திற்குள்ளாகவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

வாய்பேச முடியாத இரு மாற்றுத்திறனாளிகளிடையே உருவான அன்பிற்கு, இன்ஸ்டாகிராமில் ஆதரவு குவிந்தது. இதனையடுத்து அத்ரம் லதா, அருண் திருமணத்தை முன்னின்று நடத்தி வைக்க ஜாகிடியலில் உள்ள சமூக சேவகர்கள் குழு முன்வந்தது.

திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தி செய்து, பாரம்பரிய முறைப்படி விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்தனர். மேலும் இளம் தம்பதி புதிதாக மண வாழ்க்கையை ஆரம்பிக்க தேவையான பொருட்களையும் வழங்கி வாழ்த்தினர்.

முகமது பாபுஜான், ரியாஸ் மற்றும் கசரபு ரமேஷ் ஆகியோரது சமூக சேவைக்குழு, கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது பலருக்கும் உதவி புரிந்துள்ளது. "கொரோனா தொற்றுநோய் காலத்தில் மக்களுக்கு நாங்கள் உதவிகள் செய்தோம். இப்படியொரு ஜோடிக்கு உதவியதை நாங்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறோம். ஒருவரை ஒருவர் உளமார காதலிக்கும் இந்த ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்து, அவர்கள் குடும்பம் நடத்த தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் இதேபோல் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணத்தில் கூட வாய்பேச முடியாத, காது கேளாதவர்கள் விருந்தினர்களாக அதிக அளவில் பங்கேற்றது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்தது. திருமணத்தில் கலந்து கொண்ட சைகை மொழி நிபுணர் ரஜனி பானர்ஜி, தம்பதிகளுக்கும் அவர்களது விருந்தினர்களுக்கும் திருமண மந்திரங்களை சைகை மொழியில் விளக்கியிருந்தார்.

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் சிறப்பாகத் தொடர்புகொள்வதற்காக, டெல்லியில் உள்ள இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 2018 இல் 3,000 ISL சொற்களைக் கொண்ட ISL அகராதியின் முதல் பதிப்பை உருவாக்கியது. இதுபோன்ற முதல் அகராதி, 6,000 சொற்களைக் கொண்ட இரண்டாவது பதிப்பில் மார்ச் 2019 இல் புதுப்பிக்கப்பட்டது.