FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, March 4, 2022

இன்ஸ்டாகிராமில் இணைந்த வாய் பேச முடியாத ஜோடிக்கு கோலாகலமாக நடந்த திருமணம்!


ஆன்லைன் யுகத்தில் தினமும் ஆயிரம் காதல் கதைகள் சோசியல் மீடியா மூலமாக முளைக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் துளிர்விடும் முகம் தெரியாத காதல்கள் அனைத்தும் மணவறையை சென்று அடைவது கிடையாது. ஆனால் வாய்பேச முடியாத ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல், கல்யாணத்தில் முடிந்துள்ளது. மனதை உருக வைக்கும் இன்ஸ்டாகிராம் காதல் கதை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானாவில் உள்ள ஜகிதியா மாவட்டத்தின் ராய்கல் மண்டலத்தைச் சேர்ந்த அத்ரம் லதா என்கிற ஜோதி, ஆந்திரப்பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலைச் சேர்ந்தவர் அருண். இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி வந்துள்ளனர். ஆரம்பத்தில் நண்பர்களாக பரஸ்பரம் பழக ஒருவரைப் பற்றி, ஒருவருக்கு நன்றாக புரிதல் வந்துள்ளது. புரிதலின் அடுத்தகட்டம் என்ன காதல் தான். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த சிறிது காலத்திற்குள்ளாகவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

வாய்பேச முடியாத இரு மாற்றுத்திறனாளிகளிடையே உருவான அன்பிற்கு, இன்ஸ்டாகிராமில் ஆதரவு குவிந்தது. இதனையடுத்து அத்ரம் லதா, அருண் திருமணத்தை முன்னின்று நடத்தி வைக்க ஜாகிடியலில் உள்ள சமூக சேவகர்கள் குழு முன்வந்தது.

திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தி செய்து, பாரம்பரிய முறைப்படி விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்தனர். மேலும் இளம் தம்பதி புதிதாக மண வாழ்க்கையை ஆரம்பிக்க தேவையான பொருட்களையும் வழங்கி வாழ்த்தினர்.

முகமது பாபுஜான், ரியாஸ் மற்றும் கசரபு ரமேஷ் ஆகியோரது சமூக சேவைக்குழு, கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது பலருக்கும் உதவி புரிந்துள்ளது. "கொரோனா தொற்றுநோய் காலத்தில் மக்களுக்கு நாங்கள் உதவிகள் செய்தோம். இப்படியொரு ஜோடிக்கு உதவியதை நாங்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறோம். ஒருவரை ஒருவர் உளமார காதலிக்கும் இந்த ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்து, அவர்கள் குடும்பம் நடத்த தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் இதேபோல் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணத்தில் கூட வாய்பேச முடியாத, காது கேளாதவர்கள் விருந்தினர்களாக அதிக அளவில் பங்கேற்றது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்தது. திருமணத்தில் கலந்து கொண்ட சைகை மொழி நிபுணர் ரஜனி பானர்ஜி, தம்பதிகளுக்கும் அவர்களது விருந்தினர்களுக்கும் திருமண மந்திரங்களை சைகை மொழியில் விளக்கியிருந்தார்.

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் சிறப்பாகத் தொடர்புகொள்வதற்காக, டெல்லியில் உள்ள இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 2018 இல் 3,000 ISL சொற்களைக் கொண்ட ISL அகராதியின் முதல் பதிப்பை உருவாக்கியது. இதுபோன்ற முதல் அகராதி, 6,000 சொற்களைக் கொண்ட இரண்டாவது பதிப்பில் மார்ச் 2019 இல் புதுப்பிக்கப்பட்டது.



No comments:

Post a Comment