20.04.2026
புதுச்சேரி: புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கவுன்சிலின் 11வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் அஜீஸ் நகர் மா.கம்யூ, மாநிலக்குழு அலுவலகத்தில் நடந்தது.சங்க தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். கவுரவ பொதுச் செயலாளர் பசீத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 2026ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்கம், தடகளம், துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பதக்கங்களை வென்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
நாக்பூர் தேசிய சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரோஷன், அகமதாபாத் தடகளப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்ற விவேகன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மேலும், வேலைவாய்ப்பு பெற்ற நபர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், 2026-27ம் ஆண்டிற்கான மாநில மற்றும் சர்வதேச விளையாட்டு காலண்டர் வெளியிடப்பட்டது. இதில், ஸ்பெயின், கஜகஸ்தான், ஸ்வீடன், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடக்க உள்ள சர்வதேச போட்டிகளில் புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சட்ட ஆலோசகர் சரவணன், மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் சத்தியபுவனம் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment