FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, June 6, 2013

தேசிய அடையாள அட்டை


தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 

திட்டத்தின் சுருக்கம் ::
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது. 


திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள் ::

ஊனத்தின் விழுக்காடு 40 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். 


தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? ::
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது. 


இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் ::
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தால் அளிக்கப்படும் அடையாள அட்டையில் சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுவிடமிருந்து மாற்றுத் திறனுக்கான சான்றிதழ் பெறுதல் வேண்டும். 


விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் ::

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் 


உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் ::
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, 

ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

மாவட்ட ஆட்சித்தலைவர் /
அரசு போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள்

NATIONAL IDENTITY CARD FOR THE DIFFERENTLY ABLED PERSONS



1.
Gist of the Scheme
Issue of National Differently Abled identity cards to  Differently Abled.
National Identity cards are issued by District Differently Abled Welfare Officers based on the Disability Certificate.
2.
Eligibility Criteria
Should have a minimum of 40% disability
3.
Whether form of application is prescribed.
Yes. Available with District Differently Abled Welfare Office.
4.
Certificates to be furnished
Medical Certificate should be obtained from the competent
Medical Board.
5.
Officer to whom the application is to be submitted
District Differently Abled Welfare Officer
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled,
No.15/1, Model School Road,
Thousand Lights,
Chennai-600 006.
 

ஈமச் சடங்கு செலவுகள்


தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள்

திட்டத்தின் சுருக்கம் ::
மாற்றுத்திறனாளி இறக்க நேரிட்டால் அவரின் ஈமச் சடங்கிற்கென அவர்களின் வாரிசுதாரர்களுக்குரூ.2000/- வழங்கப்படும்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள் ::
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? ::
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது. 


இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் ::
இறப்புச் சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரிய அடையாள அட்டை

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் ::
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் 


உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் ::
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, 

ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.

தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409 

FINANCIAL ASSISTANCE TO MEET THE FUNERAL EXPENSES OF A DIFFERENTLY ABLED PERSON:


1.
Gist of the Scheme
A sum of Rs.2000/- is given as funeral expenses
2.
Eligibility Criteria
Any Differently Abled person holding the identity card issued by the Welfare Board for the Differently Abled.
3.
Whether form of application is prescribed
Yes. Available with District Differently Abled Welfare Office.
4.
Certificates to be furnished
Death Certificates, Legal Heir Certificate and Identity card issued by the Welfare Board for the Differently Abled.
5.
Officer to whom the application is to be submitted
District Differently Abled Welfare Officer
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled,
No.15/1, Model School Road,
Thousand Lights,
Chennai-600 006.
 

Tuesday, June 4, 2013

மகப்பேறு உதவி


தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள்

திட்டத்தின் சுருக்கம்::

1.மாற்றுத்திறன் படைத்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளியின் மனைவிக்கு மகப்பேறு செலவிற்கென ரூ.1000/- வீதம் ஆறு மாதத்திற்கு ரூ.6,000/- உதவித்தொகை வழங்கப்படும்
2. கருச்சிதைவு மற்றும் கரு கலைப்பிற்காக ரூ.3,000/- உதவித்தொகை வழங்கப்படும்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்::

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளி அல்லது அன்னாரின் மனைவி

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?::

ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்::

மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரிய அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழ்

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்::

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்::

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, 

ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

ASSISTANCE FOR DELIVERY / MISCARRIAGE OF PREGNANCY / TERMINATION OF PREGNANCY TO A FEMALE DIFFERENTLY ABLED PERSON


1.
Gist of the Scheme
A sum of Rs.6,000/- @ Rs.1,000/- per month for Delivery and Rs.3,000 for Miscarriage/Termination of Pregnancy given to female Differently Abled persons.
2.
Eligibility Criteria
Differently Abled person holding Identity card issued by the Welfare Board for the Differently Abled.
3.
Whether form of application is prescribed
Yes. Available with District Differently Abled Welfare Office.
4.
Certificates to be furnished
Welfare Board Disability Identity Card and Medical Certificate issued by competent authority.
5.
Officer to whom the application is to be submitted

District Differently Abled Welfare Officer
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled,
No.15/1, Model School Road,
Thousand Lights,
Chennai-600 006. Phone No. 28290409


Monday, June 3, 2013

திருமண நிதியுதவி-செவித்திறன்




தமிழக அரசின் திட்டம் – செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகளைத் திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி

திட்டத்தின் சுருக்கம்::
(அ) செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25,000/- அளிக்கப்படுகிறது. இதில் ரூ.12,500/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூ.12,500/- திருமணச் செலவிற்காக ரொக்கமாகவும் மற்றும் திருமாங்கல்யத்திற்காக 4 கிராம் தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.

(ஆ)பட்டம் மற்றும் பட்டயம் பயின்ற பெண்களுக்கு ரூ. 50,000/- மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.25,000/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் ரூ. 25,000/- திருமண செலவிற்காக ரொக்கமாகவும் மற்றும் திருமாங்கல்யத்திற்காக 4 கிராம் தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.


திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்::
தம்பதியரில் ஒருவர் பேசும் திறன் மற்றும் செவித்திறன் உடையவராக இருத்தல் வேண்டும்.தம்பதியரின் வயதும்
18க்கு மேல் இருத்தல் வேண்டும்.


தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?::
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்::
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, திருமண அத்தாட்சி மற்றும் வயது சான்றிதழ்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்::
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்::
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, 
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

MARRIAGE ASSISTANCE TO NORMAL PERSONS MARRYING SPEECH AND HEARING IMPAIRED PERSONS
1.
Gist of the Scheme
Marriage assistance is given to normal person who marries a Speech and Hearing Impaired person. Total Assistance is Rs.20,000/-. Rs.10,000/- in the form of National Savings Certificate and Rs.10,000/- cash towards marriage expenses.

2.
Eligibility Criteria
Normal person should marry a Speech and Hearing Differently Abled person. The age of the couple (both)
should be above 18 years.

3.
Whether form of application is prescribed
Yes. Prescribed format are available with District
Differently Abled Welfare Officers.

4.
Certificates to be furnished
National Identity Card for the Differently Abled and Certificate of proof for marriage and Age.

5.
Officer to whom the application is to be submitted

District Differently Abled Welfare Officer.
6.
Grievances if any to be addressed to
State Commissioner for the Differently Abled,
No.15/1, Model School Road,
Thousand Lights,
Chennai-600 006. / District Collectors.

தமிழக அரசின் புதிய சலுகைகள்


மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்கள், 20 மாவட்டங்களில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புகள்:

* சமூக நலத் துறையின் சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்கி, 12ம் வகுப்பு படித்த, நூறு மாணவியருக்கு, உயர்கல்வி படிக்க நிதியுதவி வழங்கப்படும். இதன்படி, உணவு, சீருடை மற்றும் கல்விச் செலவுக்காக, பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, ஒரு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும், தொழில் படிப்பு படிக்க, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும்.

* இதேபோல, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பயிற்சி பெறும் நூறு மாணவியருக்கு, ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.

* அனைத்து சேவை இல்ல மாணவியரும் கல்விச் சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்யப்படும்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பார்வையற்ற மாணவ, மாணவியர், 560 பேருக்கு, அரசு வழங்கும் மடிக் கணினியுடன், பேசும் மென்பொருள் சேர்த்து வழங்கப்படும்.

* செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் 1,000 பேருக்கு, காதுக்கு பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் வழங்கப்படும்.

* பள்ளி இறுதித் தேர்வில் (10 மற்றும் 12ம் வகுப்பு) மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் காதுகேளாத மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தங்கும் வசதியுடன் கூடிய தொழில் பயிற்சி நிலையம், 20 மாவட்டங்களில் துவக்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகள் 400 பேருக்கு, பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

* பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்காக 20 மாவட்டங்களில் ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் துவக்கப்படும்.

* மனவளர்ச்சி குன்றிய 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு, 10 மாவட்டங்களில் தொழிற்பயிற்சியுடன் கூடிய பத்து இல்லங்களும், 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 10 மாவட்டங்களில் தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்களும் துவக்கப்படும்.

அரசு அலுவலகத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சலுகை

சென்னை: அரசு அலுவலகங்களில் பணிபுரியும், பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவக நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக புறப்பட்டு செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களுடன் சேர்ந்து வெளியேறுவதிலும், நெரிசலான நேரத்தில் பஸ் மற்றும் ரயில்களில் ஏறிச்செல்வதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை வெளியிட்ட உத்தரவில்,

அரசுப் பணியில் உள்ள பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும், அலுவலக நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே, அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லலாம்.