மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்கள், 20 மாவட்டங்களில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
* சமூக நலத் துறையின் சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்கி, 12ம் வகுப்பு படித்த, நூறு மாணவியருக்கு, உயர்கல்வி படிக்க நிதியுதவி வழங்கப்படும். இதன்படி, உணவு, சீருடை மற்றும் கல்விச் செலவுக்காக, பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, ஒரு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும், தொழில் படிப்பு படிக்க, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும்.
* இதேபோல, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பயிற்சி பெறும் நூறு மாணவியருக்கு, ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.
* அனைத்து சேவை இல்ல மாணவியரும் கல்விச் சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்யப்படும்.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பார்வையற்ற மாணவ, மாணவியர், 560 பேருக்கு, அரசு வழங்கும் மடிக் கணினியுடன், பேசும் மென்பொருள் சேர்த்து வழங்கப்படும்.
* செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் 1,000 பேருக்கு, காதுக்கு பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் வழங்கப்படும்.
* பள்ளி இறுதித் தேர்வில் (10 மற்றும் 12ம் வகுப்பு) மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் காதுகேளாத மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்படும்.
* மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தங்கும் வசதியுடன் கூடிய தொழில் பயிற்சி நிலையம், 20 மாவட்டங்களில் துவக்கப்படும்.
* மாற்றுத் திறனாளிகள் 400 பேருக்கு, பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
* பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்காக 20 மாவட்டங்களில் ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் துவக்கப்படும்.
* மனவளர்ச்சி குன்றிய 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு, 10 மாவட்டங்களில் தொழிற்பயிற்சியுடன் கூடிய பத்து இல்லங்களும், 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 10 மாவட்டங்களில் தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்களும் துவக்கப்படும்.
No comments:
Post a Comment