![]() |
05.12.2025
மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பை அளிக்கும் வகையிலும், தேவையான திட்டங்களை வகுத்துச் சிறப்பான முறையில் செயல்படுத்தும் பணியிலும் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் இயங்கி வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணைய 233 பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதிவாய்ந்த 22 பேரை உறுப்பினர்களாக நியமித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் பணியாற்றும் முனைவர் பூபதி, பூந்தமல்லியைச் சேர்ந்த மனோகரன், பேராசிரியர் தீபக், ஊடகவியலாளர் மகேஸ்வரி, ஜான்சிராணி மற்றும் தூத்துக்குடியில் சேர்ந்த காதுகேளாத மாற்றுத் திறனாளி மெய்கண்டன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.


No comments:
Post a Comment