FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, November 2, 2021

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்.. முதியவருக்கு ஆயுள் தண்டனை.. கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு!

22.10.2021
கடலூர்: மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.ரங்கநாதன்(59),

இவரது வீட்டின் அருகே 47 வயதுடைய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் வசித்து வந்தார். பெற்றோர் இறந்து விட்டதால் அந்த பெண் தனது உறவினருடன் வசித்து வந்தார். உறவினர் பெண்ணும், அவரது கணவரும் மாற்றுத்திறனாளி பெண்ணை கவனித்து வந்தன

பாலியல் பலாத்காரம்

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி உறவினர் பெண்ணும், அவரது கணவரும் வேலைக்கு சென்று விட்டதால் மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த ரங்கநாதன், மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஓடி விட்டார். வாய் பேச முடியாத முடியாதவர் என்பதால் மாற்றுத்திறனாளி பெண்ணால் சத்தம் போட முடியவில்லை.

போலீசில் புகார்

உறவினர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது மாற்றுத்திறனாளி பெண் நடந்த சம்பவத்தை உறவினரிடம் தெரிவித்தார். அவரது உறவினர் இது தொடர்பாக பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரங்கநாதனை கைது செய்தனர்.

கைது செய்தனர்

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (கற்பழிப்புக்கான தண்டனை) மற்றும் 376 (2) (எல்) (மனநிலை அல்லது உடல் ஊனமுற்ற ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ரங்கநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். இயற்கை மரணம் அடையும் வரை ரங்கநாதன் சிறையில் இருக்க அவர் உத்தரவிட்டார்.. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி ரங்கநாதனுக்கு ரூ.30,00 அபராதம் விதித்து உத்தரவிட்டார். குற்றம் நடந்த மாதத்தில் அதே தேதியில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment