சென்னை: பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது சில சொற்கள் பயன்படுத்தப்படாது என்று பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காது கேளாத,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இந்நிலையில், காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் ஆகியசொற்கள் மாணவர் சேர்க்கையின்போது பயன்படுத்தக்கூடாது என்று பல்கலைக்கழகம் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது, மாற்றுத் திறனாளிகள் என மட்டும் குறிப்பிட வேண்டும். தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தம் மூலம் மாணவர் சேர்க்கையின்போதே மாற்றுத் திறனாளி வகையை கேள்வியாக கேட்பது தவிர்க்கப்படும். மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிட்டே விண்ணப்ப பதிவு, தேர்வுக்கான சலுகை கோருதலை இனிமேல் மேற்கொள்ள முடியும். தமிழகம் முழுவதும் காது கேளாத,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளின் செவித்திறன்களை பரிசோதனை செய்ய மாவட்டம்தோறும் சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment