FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, November 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மார்ச் மாதத்துக்குள் ஏற்படுத்த வேண்டும்

மும்பை,02 November 2014,
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து, அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநிலத்திலும், மத்திய அரசில் உள்ள மாற்றுத் திறனாளிகள் துறைகளின் தலைமை ஆணையர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சாய்வுதள படிக்கட்டுகள், மின்தூக்கிகள், கழிப்பறைகள், சக்கர நாற்காலிகள்
உள்ளிட்டவை மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளில் அடங்கும்.

இந்த உத்தரவு, கல்வி நிலையங்களோடு சார்ந்த தேர்வு மையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்கும் பொருந்தும் என்றும் தங்கள் உத்தரவையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநிலம், புணேவைச் சேர்ந்த ஆகாங்க்ஷா வர்தமான் கோலே என்ற மாற்றுத் திறனாளி மாணவி தாக்கல் செய்த மனு மீது மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மோஹித் ஷா தலைமையிலான அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

புணேயில் உள்ள கல்லூரியில் பயிலும் ஆகாங்க்ஷா வர்தமான் கோலே, "எனது கல்லூரியில் இந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

ஆனால், மாற்றுத் திறனாளி என்ற வகையில், கல்லூரியில் உரிய வசதிகள் இல்லாத நிலையில் என்னால் தேர்வு எழுத இயலாது. எனவே, இதுகுறித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து, 2001 ஜூலை 11, 2012 பிப்ரவரி 9 ஆகிய தேதிகளில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த உத்தரவு, 2012 டிசம்பர் 8-ஆம் தேதியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆணை ஆகியவற்றை மனுதாரர் மேற்கோள் காட்டினார்.

அதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் தேர்வு எழுதுவதற்கான உரிய வசதிகளை கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.'

No comments:

Post a Comment