வியாழன், 13 நவம்பர் 2014
அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஒரு அரங்கில் குறைந்தது 300 இருக்கைகள் இருந்தால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் எந்த இருக்கைக்கும் தங்களின் வீல் சேரியில் அமர்ந்து செல்லும் வகையில் வழி செய்திருக்க வேண்டும்.
அமெரிக்கா போல் மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் விழிப்புடன் இயங்கும் நாடு அல்ல நம்முடையது. மாற்றுத் திறனாகளின் துயரத்தை, அவர்களின் நடைமுறை சிரமங்களை சிறிதளவுகூட பொருட்படுத்தாதவர்கள் நாம்.
அவர்களின் துயரத்தை, சிரமங்களை அறிந்து கொள்ள, அவர்களின் வாழ்வை சொல்லும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளின் துயரத்தை விளக்கும் சர்வதேச திரைப்பட விழா வரும் 24 -ஆம் தேதி டெல்லியில் தொடங்கி மூன்று தினங்கள் நடக்க இருக்கிறது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களும், குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை மட்டுமின்றி, நவீன தொழில்நுட்பத்தால் அவர்கள் தங்கள் குறைகளை களைந்து எப்படி சாமானியர்களைப் போல் வாழ்கிறார்கள் என்பதை சொல்லும் திரைப்படங்களும் இதில் அடக்கம்.
வாய்ப்பு உள்ளவர்கள் தவறவிடக் கூடாத திரைப்பட விழா.
அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஒரு அரங்கில் குறைந்தது 300 இருக்கைகள் இருந்தால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் எந்த இருக்கைக்கும் தங்களின் வீல் சேரியில் அமர்ந்து செல்லும் வகையில் வழி செய்திருக்க வேண்டும்.
அவர்களின் துயரத்தை, சிரமங்களை அறிந்து கொள்ள, அவர்களின் வாழ்வை சொல்லும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளின் துயரத்தை விளக்கும் சர்வதேச திரைப்பட விழா வரும் 24 -ஆம் தேதி டெல்லியில் தொடங்கி மூன்று தினங்கள் நடக்க இருக்கிறது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களும், குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை மட்டுமின்றி, நவீன தொழில்நுட்பத்தால் அவர்கள் தங்கள் குறைகளை களைந்து எப்படி சாமானியர்களைப் போல் வாழ்கிறார்கள் என்பதை சொல்லும் திரைப்படங்களும் இதில் அடக்கம்.
வாய்ப்பு உள்ளவர்கள் தவறவிடக் கூடாத திரைப்பட விழா.
No comments:
Post a Comment