31.10.2014, திருப்பூர் :
அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், 14 திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 183 ஊழியர்கள்; 14 குறு அங்கன்வாடி மையங்களில் 196 உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அங்கன்வாடி பணியாளர் பணிக்கு, குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி; மலைவாழ் மக்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விதø வ மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் 40 வயது, மாற்றுத்திறனாளிகள் 25 முதல் 38 வயதுக்குள் இருக்கலாம். திருமணமானவராகவும், விண்ணப்பிக்கும் காலி பணியிட பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். முன்னுரிமை கோருவதற்கு, உரிய சான்று இருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், மலைவாழ் மக்களுக்கு 45 வயது, மாற்றுத்திறனாளிகள் 43 வயதுக்குள் இருக்கலாம். இன சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதால், அதே இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதுகுறித்த விவரங்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, வரும் 14ம் தேதி வரை அளிக்கலாம். தகுதியானோருக்கு மட்டும், நேர்காணல் கடிதம் அனுப்பப்படும், என, தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment