FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, November 13, 2014

மாற்று திறனாளி பெண்ணிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த கண்டக்டருக்கு ரூ. 27000 அபராதம்

 08.11.2014, விழுப்புரம்:
அரசு பேருந்தில் பயணம் செய்த மாற்றுத்திறனாளியிடம் முழு கட்டணம் வசூலித்த நடத்துனர் மாற்றுத்திறனாளிக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் அருகே ஆசூரை சேர்ந்தவர் ராஜாராம் மகள் ராஜேஸ்வரி (21), மாற்றுத் திறனாளி. கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி திருப்பதியில் இருந்து விழுப்புரத்திற்கு தமிழ்நாடு அரசு பேருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த பஸ்சில் வந்துள்ளார். புதுச்சேரி அருகே அரியூரைச் சேர்ந்த சம்பத் நடத்துனராக இருந்துள்ளார். பேருந்தில் ஏறியதும் ராஜேஸ்வரி தனக்கு அரசால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காண்பித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்தை கொடுத்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த நடத்துனர் இப்பேருந்தில் முழுகட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று கூறி திருப்பதியிலிருந்து விழுப்புரம் செல்ல மொத்த கட்டணத்தொகை ரூ.198ஐ வசூலித்துள்ளார். ஆனால் அரசாணைப்படி மாற்றுத்திறனாயிளிடம் நான்கில் ஒரு பங்காக ரூ.49.50 பைசா வசூலிக்க வேண்டும். ஆரசாணையை மீறி கூடுதலாக ரூ.148.50 வசூலித்துள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி வக்கீல் மூலம் விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அரசு விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தது மட்டுமல்லாமல் சக பயணிகள் முன்னிலையில் இழிவாக பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக அந்த மனுவில் கூறியிருந்தார். மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நேற்று நீதிபதி கணேசன் தீர்ப்பு கூறினார்.

அதில் நடத்துனர் சம்பத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.27 ஆயிரம் ராஜேஸ்வரிக்கு வழங்க வேண்டும். கூடுதலாக வசூலித்த டிக்கெட் கட்டணம் ரூ.148.50 பைசாவையும் இரண்டு மாதத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டும். இதனை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடத்துனர் சம்பத்தின் மாத சம்பளத்தில் பிடித்து ராஜேஸ்வரிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment