FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, September 14, 2019

தருமபுரி: தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளி பெண்கள் விண்ணப்பிக்கலாம்



ஆவின் பால் பொருள் விற்பனை மையம்; பயன்பெற அழைப்பு




ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 2019-20ம் நிதியாண்டுக்கு கை, கால்கள், காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு, சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க, ஒருவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள், தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தேசிய அடையாள அட்டையுடன், செப்., 25க்குள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நாகர்கோவில் அரசு ஐ.டி.ஐ.யில் சேர செவி-பேச்சு திறனற்றோருக்கு வாய்ப்பு



காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் பலாத்கார வழக்கு: இரு வாலிபர்களுக்கு சிறை தண்டனை

14.09.2019, கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், இருவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமி காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர், 2013 நவ., 2ல் கடைக்கு சென்றார். அப்போது ஓசூர் பாகலூர் ரோட்டை சேர்ந்த ஆர்.சுரேஷ், 26, பாரதியார் நகரை சேர்ந்த எஸ்.சுரேஷ், 23, ஆகியோர் சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போதைய ஓசூர் ஹட்கோ இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்.ஐ., சாவித்திரி ஆகியோர் விசாரணை நடத்தி, இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி ஆர்.சுரேஷூக்கு ஆயுள் தண்டனையில் பாதி, 5,000 ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் மூன்று மாத சிறை, கொலை மிரட்டல் பிரிவிற்கு மூன்று ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். எஸ்.சுரேஷூக்கு ஆயுள் தண்டனையில் பாதி, 6,000 ரூபாய் அபராதம், தவறும் பட்சத்தில் மூன்று மாத சிறை தண்டனை விதித்தார். அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.

‘காது கேளாத, வாய் பேச முடியாத’ பெண்ணிற்கு நடந்த பயங்கரம்.. ‘நாடகமாடிய மாற்றுத்திறனாளி இளைஞரை’.. மடக்கிப் பிடித்த குடும்பத்தினர்..

07.09.2019
அஹமதாபாத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த மாற்றுத்திறனாளி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே உள்ள அம்ராய்வாடி என்ற பகுதியைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 23 வயது பெண் ஒருவர் கடந்த ஞாயிறன்று வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இரண்டு நாட்களாக அந்தப் பெண்ணை அவருடைய குடும்பத்தினர் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மங்கேஷ் பரத்வாஜ் என்னும் மாற்றுத்திறனாளி இளைஞர் தனது 3 சக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணை அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு பெண்ணின் குடும்பத்தினரிடம் அருகிலுள்ள மைதானம் ஒன்றில் அந்தப் பெண் இருந்ததாகவும், தான் அவரைப் பார்த்து அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்தப் பெண்ணின் ஆடைகள் கிழிந்தும், கறைபட்டும் இருந்ததைப் பார்த்த அவருடைய குடும்பத்தினருக்கு மங்கேஷின் நடவடிக்கையில் சந்தேகம் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மங்கேஷ் கூறிய மைதானத்திற்கு அவரையும் அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்ற குடும்பத்தினர் அங்கிருந்த ஒருவரிடம் தங்கள் பெண்ணை காட்டி, இவரை இங்கு பார்த்திருக்கிறீர்களா எனக் கேட்டுள்ளார்கள்.

அதற்கு அவர் 2 நாட்களுக்கு முன்னால் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை அங்கு கூட்டி வந்ததாகக் கூற, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மங்கேஷிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர். அதில் மங்கேஷ் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மங்கேஷைக் கைது செய்துள்ளனர்.