FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, September 14, 2019

‘காது கேளாத, வாய் பேச முடியாத’ பெண்ணிற்கு நடந்த பயங்கரம்.. ‘நாடகமாடிய மாற்றுத்திறனாளி இளைஞரை’.. மடக்கிப் பிடித்த குடும்பத்தினர்..

07.09.2019
அஹமதாபாத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த மாற்றுத்திறனாளி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே உள்ள அம்ராய்வாடி என்ற பகுதியைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 23 வயது பெண் ஒருவர் கடந்த ஞாயிறன்று வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இரண்டு நாட்களாக அந்தப் பெண்ணை அவருடைய குடும்பத்தினர் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மங்கேஷ் பரத்வாஜ் என்னும் மாற்றுத்திறனாளி இளைஞர் தனது 3 சக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணை அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு பெண்ணின் குடும்பத்தினரிடம் அருகிலுள்ள மைதானம் ஒன்றில் அந்தப் பெண் இருந்ததாகவும், தான் அவரைப் பார்த்து அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்தப் பெண்ணின் ஆடைகள் கிழிந்தும், கறைபட்டும் இருந்ததைப் பார்த்த அவருடைய குடும்பத்தினருக்கு மங்கேஷின் நடவடிக்கையில் சந்தேகம் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மங்கேஷ் கூறிய மைதானத்திற்கு அவரையும் அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்ற குடும்பத்தினர் அங்கிருந்த ஒருவரிடம் தங்கள் பெண்ணை காட்டி, இவரை இங்கு பார்த்திருக்கிறீர்களா எனக் கேட்டுள்ளார்கள்.

அதற்கு அவர் 2 நாட்களுக்கு முன்னால் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை அங்கு கூட்டி வந்ததாகக் கூற, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மங்கேஷிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர். அதில் மங்கேஷ் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மங்கேஷைக் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment