FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, September 14, 2019

காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் பலாத்கார வழக்கு: இரு வாலிபர்களுக்கு சிறை தண்டனை

14.09.2019, கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், இருவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமி காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர், 2013 நவ., 2ல் கடைக்கு சென்றார். அப்போது ஓசூர் பாகலூர் ரோட்டை சேர்ந்த ஆர்.சுரேஷ், 26, பாரதியார் நகரை சேர்ந்த எஸ்.சுரேஷ், 23, ஆகியோர் சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போதைய ஓசூர் ஹட்கோ இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்.ஐ., சாவித்திரி ஆகியோர் விசாரணை நடத்தி, இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி ஆர்.சுரேஷூக்கு ஆயுள் தண்டனையில் பாதி, 5,000 ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் மூன்று மாத சிறை, கொலை மிரட்டல் பிரிவிற்கு மூன்று ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். எஸ்.சுரேஷூக்கு ஆயுள் தண்டனையில் பாதி, 6,000 ரூபாய் அபராதம், தவறும் பட்சத்தில் மூன்று மாத சிறை தண்டனை விதித்தார். அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.

No comments:

Post a Comment