FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, February 16, 2021

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிக்கு வாழ்க்கை

16.02.2021
திருநங்கை ஒருவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட, மாற்றுத்திறனாளிக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்து, அவருக்கு திருமணமும் செய்து வைக்க, 'சகோதரன்' அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.திருநங்கையரின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், திருநங்கையர் சிலரால், 'சகோதரன்' அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர், திருங்நங்கை சக்திதேவி, 36. இவர், வாய் பேச முடியாத, காது கேளாத, சரவணன் என்ற இளைஞரை, ஆறு ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து, சொந்த மகனாகக் கருதி வளர்த்து வருகிறார். தற்போது, 26 வயதாகும் சரவணன், கைத்தொழில் சிலவற்றை கற்றுள்ளார். அவருக்கு, உரிய வேலை வாய்ப்பு பெற்று தரவும், திருமணம் செய்து வைக்கவும் சக்திதேவி திட்டமிட்டுஉள்ளார். இதற்காக, கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும், 'சகோதரன்' அமைப்பும் முயற்சி மேற்கொண்டுள்ளது.''சரவணனுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவும், அவருக்கு வாழ்க்கை துணை அமைத்து தருவதில் உதவவும் விரும்புவோர், 95000 57212 மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,'' என, அந்த அமைப்பை சேர்ந்த திருநங்கை சுதா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment