FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, February 16, 2021

செவித்திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வரப்பிரசாதம்

14.02.2021
கடந்த 2018ல் உலக சுகாதார அமைப்பு மதிப்பீட்டின் படி இந்தியாவில் 6.30 கோடி மக்கள் குறிப்பிடத்தக்க செவித்திறன் இழப்புடன் வாழ்கின்றனர்.இந்தியாவின் 139 கோடி மக்கள் தொகையை வைத்து பார்க்கும் போது இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை.செவித்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்விக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இன்னும் உள்ளது.

அவர்களின் குழந்தை பருவம் துவங்கி இளமை பருவம் வரை இந்த இடைவெளி தொடர்வது வருத்தமான ஒன்று.புனேவை சேர்ந்த 'ஸ்டார்ட்- அப்' கம்பெனியான 'ப்ளீடெக் இன்னவேஷன்ஸ்' (Bleetech Innovations) நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த இடைவெளியை குறைக்க முயற்சிக்கிறது.

இது ஒரு இலவச செயலி மற்றும் இணையதளம். இந்திய 'சைகை' மொழியில் நிறைய உள்ளடக்கங்களை வழங்குகிறது.புனேவின் எம்.ஐ.டி.யில் 'ப்ராடக் டிசைன்' படிக்கும் போது ஜான்வி ஜோஷி மற்றும் நுபூர் கிர்லோஸ்கர் ஆகியோரால் இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனியான 'ப்ளீடெக்' துவக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஒரு 'ஸ்மார்ட் வாட்ச்' வடிவமைக்கும் திட்டத்தில் பணியாற்றினர்.

அது செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிர்வுகளின் மூலம் இசையை கேட்க உதவுவதாக இருந்தது. அந்த நேரத்தில் தான் பல செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுடன் தொடர்பில் இருக்க நேரிட்டது.'ஒரு சில விதிவிலக்குகளை தவிர இந்தியாவில் உள்ள செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து பள்ளிகளும் 'oralism' என அழைக்கப்படும் பேச்சு மற்றும் உதடு வாசிப்பு முறையை மட்டுமே பயன்படுத்துகின்றன.

அவை சைகை மொழியில் இல்லாதது ஒரு குறை தான்' என்று அவர் கூறுகிறார்.'ப்ளீ' டிவியில் உள்ள உள்ளடக்கம் செய்தி நிதி கல்வியறிவு நடப்பு விவகாரங்கள் தார்மீக கதைகள் ஆங்கில மொழி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுய உதவி போன்ற தலைப்புகள் கொண்ட வீடியோக்கள் பல உள்ளன.இந்த தளம் 1200 குழந்தைகள் உட்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவி திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளை அடைந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது.

இந்த கொரோனா சமயத்தில் அவர்களால் பள்ளிக்கு செல்லவும் இயலவில்லை.'டிவி' முதலிய பொழுதுபோக்கு சாதனங்களை பார்த்தாலும் அவர்களுக்கு புரிவதில்லை. இதனால் இவர்களின் இந்த இணையதளம் செயலி 'டிவி' ஆகியவை மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த செயலியை உங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிறுவனம் சிறந்த 'ஸ்டார்ட் அப்' முயற்சிக்காக பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. இணையதளம் - https://www.bleetech.in www.bleetv.in சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com மொபைல் போன்: 98204-51259 இணையதளம்: www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -



No comments:

Post a Comment