FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, October 13, 2022

காணாமல் போய் 6 ஆண்டுகளுக்குப் பிறகு; `ஆதார்' உதவியால் குடும்பத்துடன் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்

 

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் நவம்பர் 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் (15 வயது) காணாமல் போயிருக்கிறான். சிறுவனின் குடும்பத்தினர் அவனைப் பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதே ஆண்டு, நவம்பர் மாதம் 28-ம் தேதி நாக்பூர் ரயில் நிலையத்தில் அந்த மாற்றுத்திறனாளி சிறுவனை மீட்ட ரயில் நிலைய அதிகாரிகள், அவனை நாக்பூரில் உள்ள அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் அவருக்கு பிரேம் ரமேஷ் இங்கலே என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் அந்தப் பெயரிலேயே சிறுவனுக்கு ஆதார் அட்டை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தக் காப்பகத்தின் கண்காணிப்பாளர் விண்ணப்பித்திருக்கிறார்.

ஆனால் அந்தச் சிறுவனின் கைரேகை ஏற்கெனவே ஒரு ஆதாரத்துடன் பொருந்தியதால், புதிய ஆதார் எண்ணை உருவாக்க முடியவில்லை. இதனால் குழப்பம் நீடித்திருக்கிறது. அதையடுத்து, மும்பையிலுள்ள ஆதார் ஆணையத்தின் மண்டலக் கண்காணிப்பாளர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டிருக்கிறார். விசாரணையில், பீகாரின் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற பெயருடன் 2016-ம் ஆண்டு ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதன் பிறகு நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், பீகாரில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுவனான சச்சின் குமார் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காணாமல்போயிருந்தது தெரியவந்தது. காது கேளாத, ஊமைச் சிறுவன் என்பதால் அவனால் தன்னுடைய விவரங்களைக் காப்பக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, ஆதார் அட்டையில் இருந்த முகவரிக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அவருடைய தாய் மற்றும் உறவினர்கள் நாக்பூருக்கு விரைந்து சச்சின் குமாரை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சச்சின் குமார் (21) ஆதார் அட்டையின் உதவியுடன் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் அனைவரையும் நெகிழச்செய்திருக்கிறது.



No comments:

Post a Comment