FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, October 16, 2024

சர்வதேச காதுகேளாதோர், இந்திய சைகை மொழி தின பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்



24.09.2024,திருவள்ளூர்: 

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ச.சீனிவாசன் தலைமை தாங்கினார். பேரணியை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்தப் பேரணியில் 50க்கும் மேற்பட்ட காதுகேளாத மாற்றத்திறனாளி மாணவ, மாணவியர்கள் மற்றும் காதுகேளாதோர் சங்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு சைகை மொழி என் கையில், சைகை மொழியை போற்றுவோம், சைகை மொழியே என் மொழி, என் கையே என் வாய், சர்வதேச காதுகேளாதோர் தினம் வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

முன்னதாக சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் மற்றும் காதுகேளாத சங்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் மலர்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் பயிற்சி உதவி கலெக்டர் ஆயுஸ் குப்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment