11.02.2026 ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி க்கு உட்பட்ட மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப் பகுதியில், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட காது கேளாதோர் சங்க அலுவலகம் செல்லும் வழியி-லுள்ள பாதையில் கடந்த, 2 ஆண்டுக்கு முன், கழிவு நீர் சீரமைப்பு பணிக்காக, பள்ளம் தோண்-டப்பட்டு மூடப்பட்டாமல் விடப்பட்டுள்ளது. அதனால் கழிவுநீர் தேங்கி, அவ்வழியாக செல்லும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.

கடந்த டிச., மாத இறுதியில் மத்திகிரி பஸ் ஸ்டாண்டில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க-வில்லை. இந்நிலையில், துளிர் நகர் பகுதியில் உள்ள கழிவு நீரை, டைட்டன் டவுன்ஷிப் வழியாக எடுத்து செல்ல ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கு, டைட்டன் டவுன் ஷிப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கோரி, ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துரை தலைமையில், நேற்று மாலை டைட்டன் டவுன் ஷிப் பகுதி மக்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, ஓசூர் சப்-க-லெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்-தனர். அங்கு சப்-கலெக்டர் இல்லாததால், தாசில்தார் குணசிவாவிடம் மனுவை வழங்கினர்.

No comments:
Post a Comment