FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, February 3, 2026

மாற்றுத் திறனாளிகள் குறைகளை தீர்க்க உ.பி.யில் நடமாடும் அரசு அலுவலகம்



02.02.2026
புதுடெல்லி: உத்​தரபிரதேசத்​தில் மாற்​றுத்​திற​னாளி​கள் குறை​களை தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் ரேபரேலி மாவட்​டத்​தில் அமைக்​கப்​படு​கிறது.

உ.பி.​யின் ரேபரேலி மாவட்​டத்​தில் சுமார் 15,000 பதிவு செய்​யப்​பட்ட மற்​றும் நூற்றுக்​கணக்​கான பதிவு செய்​யப்​ப​டாத மாற்​றுத்​திற​னாளி​கள் உள்​ளனர்.

இவர்​கள் மாற்​றுத்​திற​னாளி சான்​றிதழ், கல்வி நிறு​வனங்​களில் சேரு​வதற்​கான இடஒதுக்​கீடு, அரசு வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகள் தொடர்​பாக பல்​வேறு அரசு அலு​வல​கங்​களுக்கு செல்ல வேண்​டிய கட்​டா​யம் ஏற்​படு​கிறது.

இதில் அவர்​களுக்கு ஏற்​படும் சிரமங்​களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் வகை​யில் ஒரு முக்​கிய உத்​தரவை ரேபரேலி மாவட்ட ஆட்​சி​யர் ஹர்​ஷிதா மாத்​தூர் பிறப்​பித்​துள்​ளார்.

இதில் அவர், மாற்​றுத் திற​னாளி​களின் புகார்​கள் மற்​றும் குறை​களைத் தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் செயல்படும் என அறி​வித்​துள்​ளார்.

அவர் தனது அறி​விப்​பில், ‘‘இந்த நடமாடும் அலு​வல​கம் வாயி​லாக மாற்​றுத் திறனாளி​களின் பிரச்​சினை​களை மாநில ஆணை​யர் கேட்​டறிந்​து, அவற்​றுக்கு தீர்வு காண உரிய உத்​தர​வு​களை பிறப்​பிப்​பார்.

மாவட்ட ஊராட்​சி, சுகா​தா​ரம், சாலைப் போக்​கு​வரத்​து, ரயில்வே உள்​ளிட்ட பல்​வேறு துறை​களின் அதி​காரி​களும் நடமாடும் அலு​வல​கத்​துடன் தொடர்​பில் இருப்​பார்​கள். மாற்​றுத்​திற​னாளி​களை மாவட்ட மருத்​து​வர் குழு​வினர் பரிசோதித்​து, மாற்​றுத்​திற​னாளி சான்​றிதழ் வழங்​கு​வார்​கள்.மாற்​றுத்​திறனாளி அடிப்​படையி​லான பாகு​பாடு தொடர்​பான புகார்​களும் இதில் விசா​ரிக்​கப்​படும்’’ என்று கூறி​யுள்​ளார்.

இந்த நடமாடும் அலு​வல​கம் பிப்​ர​வரி 2-ம் தேதி, ரேபரேலி​யின் ரதப்​பூர் சமூக மையத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த அறி​விப்​புக்கு உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்​டங்​களி​லும் இத்​திட்​டத்தை அறி​முகப்​படுத்த அவர் ஆலோ​சனை செய்து வரு​கிறார். ரேபரேலி​யில் அமைய இருப்​பது உ.பி.​யின்​ முதல்​ நடமாடும்​ அரசு அலு​வல​கம்​ ஆகும்​.


No comments:

Post a Comment