FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, January 1, 2026

கோவையை கலக்கும் ‘நம்ம லாண்டரி’ - மாற்றுத்திறனாளிகளின் முயற்சிக்கு பெருகும் வரவேற்பு




 

31.12.2025 
 ஏராளமான மாற்றுத்திறனாளிகள் எனது தந்தையிடம் வந்து வேலைவாய்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் ‘நம்ம லாண்டரி’ தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் சினேகா.

"வாய் பேச முடியாமல், காது கேட்காத நிலையிலும் தகவல் தொடர்பு பிரச்சனை எங்களுக்கு இருந்ததில்லை. வாட்ஸ்ஆப் (WhatsApp) மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்கிறார்கள். கூகுள் மேப் (google map) மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே நேரடியாக சென்று துணிகளை வாங்கி வருகிறோம்" என்கிறார் முரளி.

வேலைவாய்ப்பு... இது தான் இன்றைய இளைஞர்களின் மிகப் பெரிய கனவு. பெரிய படிப்புகள் முடித்திருந்தாலும், வேலை தேடி அலையும் பலரை நாம் பார்த்து வருகிறோம். அதிலும், மாற்றுத்திறனாளிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனாலும், வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி தம்பதி, தங்களைப் போன்றவர்களுக்கு சப்தமில்லாமல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கோவையில் தற்போது பிரபலமாகி வருகிறது 'நம்ம லாண்டரி'. துணிகளை துவைத்து, காய வைத்து அயர்ன் பண்ணிக் கொடுக்கிற லாண்டரி கடையில் என்ன சிறப்பு இருக்க முடியும்? ஆனால்'நம்ம லாண்டரி'க்கு நிறைய சிறப்புகள் உள்ளன. இதனை நடத்தி வருபவர்கள் முரளி மற்றும் அவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்கள். இது மட்டுமல்லாமல், இங்கு பணியாற்றி வரும் 5 பேரும் வேலைவாய்ப்பின்றி தவித்து வந்த காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள்.

உணவு, உடை, உறைவிடம். இது தான் மனிதனின் அத்யாவசிய தேவை. இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு எந்த தொழிலை தொடங்கினாலும் சாதிக்கலாம் என்பது தொழில் துறையில் வெற்றி பெற்றவர்களின் சூட்சமம். அதனை பின்பற்றி, லாண்டரி தொழிலில் நுழைந்து சாதனை படைத்து வருகின்றனர் மாற்றுத்திறனாளிகளான முரளி மற்றும் சுதா.



கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர்கள் முரளி மற்றும் சுதா. இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களைப் போன்ற செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், Deaf Leaders Foundation என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், ஏராளமானவர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி வழங்கியதோடு, அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

அவர்களது முயற்சியின் அடுத்த பரிணாமமாக தொடங்கியது தான் 'நம்ம லாண்டரி'. தங்களின் Deaf Leaders Foundation அமைப்பின் மூலம் கடந்த ஜனவரி மாதம் கோவை சாய்பாபா காலனியில் ‘நம்ம லாண்டரி‘யை தொடங்கினர். சுமார் 2 லட்ச ரூபாய் முதலீட்டில் இந்த கிளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தாலும், இப்போது சாய்பாபா காலனி பகுதி மக்கள் மட்டுமல்லாமல், அருகில் உள்ள பகுதி மக்களும் ‘நம்ம லாண்டரி‘க்கு கை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.


இதற்கு காரணம் இங்கு பணியாற்றும் 5 பேரும் காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் என்பது மட்டுமல்ல, அவர்களது தொழில் நேர்த்தி என்பது தான். தற்போது ‘நம்ம லாண்டரி‘யின் 2-வது கிளையை கணுவாய் பகுதியில் விரைவில் திறக்கப்படவுள்ளது. இது குறித்து கேள்விபட்டவுடன், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகக் குழு, சாய்பாபா காலனியில் உள்ள ‘நம்ம லாண்டரி‘க்கு சென்றோம்.

அங்கு நாம் சென்ற போது, அங்கிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பணியாளர்கள், துணிகளை அயர்ன் பண்ணிக் கொண்டிருந்தனர். நாம் சென்றது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் துணிகளை நேர்த்தியாக மடித்து அழகாக அயர்ன் பண்ணிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ‘நம்ம லாண்டரி‘யின் உரிமையாளரும், Deaf Leaders Foundation இயக்குநருமான முரளியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். அப்போது அவர் நம்மிடம் சைகை மொழியில் பேசத் தொடங்கினார். அவர் பேசுவதை அவரது மகள் சினேகா நமக்கு மொழிபெயர்த்தார்.

நம்மிடம் பேசிய முரளி, “கடந்த ஒரு வருடமாக ‘நம்ம லாண்டரி’ என்ற பெயரில் சலவை நிலையம் (Namma Laundry) நடத்தி வருகிறோம். இரண்டு தனியார் அமைப்புகளின் உதவியுடன், வேலையில்லாமல் இருந்த காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாத (Deaf and dumb people) 5 பேரை கொண்டு இதனை தொடங்கினோம்“ என்றார்.

மேலும், ‘நம்ம லாண்டரி‘யின் வாடிக்கையாளர்கள், அன்றாடப் பணிகள் குறித்து நாம் கேட்டோம். அதற்கு பதில் அளித்த அவர், “தினமும் 300 முதல் 400 வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இங்கு துணி துவைத்தல் (washing), இஸ்திரி (Iron), நீராவி சலவை (steam Iron), உலர் சலவை (dry cleaning) ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு செய்து தருகிறோம்“ என்றார்.

இங்கு பணியாற்றுபவர்கள் வாய் பேச முடியாத, காது கேளாதவர்கள் என்பதால், வாடிக்கையாளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள்? என்று கேட்டோம். அதற்கு பதில் அளித்த முரளி, “எங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தகவல் தொடர்பில் இதுவரை எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ‘நம்ம லாண்டரி‘க்கென தனி வாட்ஸ்ஆப் எண் வைத்துள்ளோம்.

இதில் வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள். சிலர் இங்கு வந்து துணியை கொடுத்து சலவை செய்து அயர்ன் பண்ணி வாங்கிச் செல்கின்றனர். மேலும், வர முடியாதவர்கள் எங்களை தொடர்பு கொண்டால், கூகுள் மேப் (google map) மூலம் அவர்களது முகவரியை அனுப்பச் சொல்வோம். அவர்கள் அனுப்பிய பிறகு, வாடிக்கையளர்களின் வீடுகளுக்கு சென்று துணிகளை வாங்கி வருவோம்“ என்று அவர்கள் சலவை செய்து தரும் துணி போல் 'பளிச்' என்று பதில் அளித்தார்.

“இந்த கிளையில், 5 பேர் முழுநேரமும், டெலிவரிக்காக ஒருவர் பகுதி நேரமாகவும் பணியாற்றி வருகின்றனர். ‘நம்ம லாண்டரி‘யின் 2-வது கிளையை கணுவாய் பகுதியில் விரைவில் தொடங்க உள்ளோம். தொடர்ந்து 3-வது கிளையை சூலூர் பகுதியில் திறக்க உள்ளோம். அந்த கிளைகளிலும், எங்களைப் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளோம். எங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு அளித்து வருகின்றனர்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

தொடர்ந்து, சினேகா நம்மிடம் பேசுகையில், “ஏராளமான மாற்றுத்திறனாளிகள் எனது தந்தையிடம் வந்து வேலைவாய்ப்பு கேட்டுச் சென்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கிலே ‘நம்ம லாண்டரி‘யை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். வாட்ஸ்ஆப் மூலம் அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. 100-க்கும் அதிகமானோர் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

எங்களுக்கு பொதுமக்கள் நல்ல ஆதரவு தருகின்றனர். சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு உதவியின் கீழ் எங்களுக்கு சிலர் உதவி செய்கின்றனர். அதனை நாங்களும் மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். மற்ற இடங்களை காட்டிலும் குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு சலவை செய்து கொடுக்கிறோம். ஒரு துணியை ‘நம்ம லாண்டரி‘யில் அயர்னிங் செய்வதற்கு ரூ.12, ஒரு கிலோ துணியை சலவை செய்வதற்கு ரூ.120 மட்டுமே கட்டணமாக பெறுகிறோம்” என்றார்.




No comments:

Post a Comment