தர்மபுரியில் செயல்பட்டு வரும், செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ், வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி அருகே, இலக்கியம்பட்டியில் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவியருக்கு, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை சீருடை, பாடப் புத்தகங்கள், பாட குறிப்பேடுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர் தங்கி படிக்க, இலவச உணவுடன் கூடிய, தனித்தனி விடுதி வசதி உள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால், திறன் வகுப்பறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் மூலம், பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மாலையில் மாணவ, மாணவியர் விளையாட விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா போன்ற வசதி உள்ளது. 2026 2027ம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. செவித்திறன் குறைபாடுடைய மாணாக்கர்களை இப்பள்ளியில் சேர்க்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி, தர்மபுரி - 5, என்ற முகவரியில் நேரில் அணுகலாம் அல்லது பள்ளி தலைமை ஆசிரியர் மொபைல், 94884 73760 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரம் கேட்டறியலாம்.


No comments:
Post a Comment