FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, August 13, 2025

காது கேளாத மற்றும் வாய் பேசாதவர்களுக்கு உதவித்தொகை ரூ.6 ஆயிரமாக வழங்கணும் ஓசூர் மாநாட்டில் தீர்மானம்


ஓசூரில் நடந்த தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநாட்டில், மாநில தலைவர் பழனிசாமியை, அதிமுக துணை பொதுச்செயலாளர் முனுசாமி கவுரவித்தார். அருகில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு.

ஓசூர், ஆக.12
தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்ட மைப்பின் மாநில மாநாடு, 40வது ஆண்டு ரூபி ஜூப்ளி விழா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்க 15வது ஆண்டு விழா ஒசூர் மாநகராட்சி மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப்பில் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்எல்ஏவுமான முனுசாமி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். கூட்டமைப்பின் மாநில தலைவர் பழனிசாமி, பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் உட்பட மாநிலத்தின் 38 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் 100க்கும் ன காது கேளாத, வாய் பேச அதிகமான இயலாத மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளான காது கேளா தோர் மற்றும் வாய் பேசாதவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சலுகைகள் முழுமையாக சென்றடையவில்லை.

எனவே முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 ஆக இருந்ததை ரூ.1,500 என உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.

இதனை வரவேற்றுள்ள நிலையில் இந்த உதவித்தொகை சிறு நிபந்தனைகளின் காரணமாக குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே பயனடையும் நிலை உள்ளதால் அனைவரும் பயனடையும் வகையில்  நிபந்தனைகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை தொடர்ந்து நிருபர்களிடம் தமிழ் நாடு நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு கூறியதாவது, காது கேளாதவர்களுக்கு இப்போது, அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை ரூ,1,500 யாருக்கும் சென்றடையவில்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத சிறு, சிறு நிபந்தனைகளால் பயனடைய இயலாத நிலை உள்ளது. எனவே அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,500 உதவித்தொகை அனைத்து காது கேளாதவர்களுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா மாநிலத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதுபோல், தமிழகத்திலும் உதவித் தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment