தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார
மேம்பாட்டுக்கழகம் (NHFDC) National Handicapped Finance and Development
Corporation) வழங்கும் கடன் உதவி:-
1) மாற்றுத்திறனாளிகள்
சுயதொழில் தொடங்க தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் பலவித
சலுகைக் கடன்களை வழங்குகிறது.
2) விற்பனை, வியாபார நடவடிக்கைகளுக்கு 3 லட்சம் ரூபாய்
வரையும், சேவைப்பிரிவுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் கடன் பெறலாம். தொழில் செய்ய ஆட்டோ
ரிக்சா, வேன் போன்ற வாகனங்கள் வாங்க, விவசாயப் பணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை
கடன் கிடைக்கும். பொருட்கள் உற்பத்தி, தயாரிப்புக்காக சிறு தொழிற்கூடங்கள் அமைக்க
25 லட்சம் ரூபாய் கடன் உதவி.
3) மன்நலம் பாதிக்கப்பட்டவர்கள், செரிபிரல்கஃபேல்சி
மற்றும் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்கள் சுயதொழில் தொடங்க அவர்களின்
வாழ்க்கைத்துணை, பெற்றோர் 5 லட்சம் ரூபாய் கடன் பெறலாம்.
4) இந்தியாவில் படிக்க ரூ.7.50 லட்சம், வெளிநாடுகளில்
படிக்க ரூ.15 லட்சம் வரை கல்விக்கடன்
கிடைக்கும்.
5) நுண் கடன் திட்ட்த்தின் கீழ் (Micro Credit
Scheme) தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம், பயனாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய்
வரை கடன் தரப்படும்.
நிபந்தனைகள்:
1) இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும். 40% அல்லது
அதற்கு மேற்பட்ட அளவில் திறன் பாதிப்பு.
2) 18லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
3) நகர் பகுதியில் வசிப்பவராக் இருந்தால் ரூ.5
லட்சத்துக்குக் குறைவாகவும், கிராமப் பகுதியில் வசிப்பவராக ரூ.3 லட்சத்துக்குக்
குறைவாகவும் ஆண்டு வருமானம் இருக்கவேண்டும்.
4) தொடர்புடைய கல்வி, தொழில்நுட்பச் சான்றிதழ்களை வைத்திருக்கவேண்டும்.
தேவையான் அனுபவமும் பெற்றிருக்கவேண்டும்.
வட்டி விகிதம்:
5) 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு ஆண்டுக்கு 5%. 50
ஆயிரத்துக்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை
ஆண்டுக்கு 6%. 5 லட்சத்துக்கு மேல் ஆண்டுக்கு 8%.
திருப்பிச்செலுத்தும்
காலம்:
6) பொதுக் கடன்களை 10 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும்.
7) கல்விக் கடன்களை 7 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும்.
(படிப்பு முடித்த 6 மாதங்கள் அல்லது வேலை கிடைத்த பிறகு எது முன்னதாகவோ அதிலிருந்து
தவணை).
கடன் தள்ளுபடி:
1) தேசிய மாற்றுத்திறனாளிகள்
பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வழங்கும் கடன் திட்டங்களில் பெண்களுக்கு வட்டியில் 1
சதவிகிதமும், சில திட்டங்களுக்கு 0.5 சதவிகிதமும் சிறப்புத் தள்ளுபடி உண்டு.
எப்படி விண்ணப்பிப்பது?
1) தேசிய மாற்றுத்திறனாளிகள்
பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில முகவர்கள் மூலமாக
விண்ணப்பிக்கலாம். தமிழக முகவரி: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி
லிமிடெட் (TNSC Bank),
233, நேதாஷி
சுபாஷ் சந்திரபோஷ் சாலை, சென்னை-600001. போன்: 044-25302300
2) மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
நல அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெறலாம்.
3) கடன் உதவி பெற கால தாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய:
முதன்மைச் செயலாளர்/ மாற்றுத்திறனாளிகளுக்கான
மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை,
கே.கே.நகர், சென்னை-600078. போன்: 044-24719948, 044-24719949
No comments:
Post a Comment