FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, May 31, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பள்ளி இல்லாததால்... சிக்கல் மாவட்டத்தில் காதுகேளாதோர், வாய் பேசாதோர் அவதி


மார்ச் 23,2013
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காது கேளாதோர், வாய் பேசாதோருக்கான சிறப்பு பள்ளி இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் பேச்சு பயிற்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சிக்காக மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்வதால், பெற்றோருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. புதன்தோறும் நடைபெறும் சிறப்பு முகாமில், டாக்டர்களால் ஊனத்தின் தன்மை கண்டறியப்பட்டு, தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தவிர, கை கால் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. கை, கால் குறைபாடு உடையவர்கள் பயிற்சி பெறும் வகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் "பிசியோதெரபிஸ்ட்' கூடம் உள்ளது. இதற்கான பயிற்சியாளர் இல்லாததால் முடங்கியுள்ளது. இதேபோல், ஆர்த்தோ டெக்னீசியன் (முடநீக்கு வல்லுணர்), பேச்சு பயிற்சியாளர் ( ஸ்பீச் தெரபிஸ்ட்) இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்கள், சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் வகையில், அவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம், தேவிபட்டினத்தில் தொழிற் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டுமே, பயிற்சி பெற்று வருகின்றனர். ஊதுபத்தி தயாரிப்பு, பேப்பர் கவர் தயாரிப்பு, சிப்பி மாலை தயாரித்தல், கூடை பின்னுதல், பினாயில் தயாரிப்பு உள்ளிட்ட கைத்தொழில் கற்றுத்தரப்படுகிறது. போதிய பயிற்சியாளர்கள் இல்லாததால் தொழில் கற்றுக் கொள்வதிலும் சிரமம் உள்ளது.மாவட்டத்தில், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான சிறப்பு பள்ளி இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் பலர், டாக்டரின் ஆலோசனைப்படி மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செயல்படும், சிறப்பு பள்ளிகளில் பயிற்சி பெறுகின்றனர். இதேபோன்று, பார்வையற்றோர் பள்ளியும் இங்கு இல்லை. இதனால், இவர்கள், பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: முடநீக்கு வல்லுனர், பிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து, துறை இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, என்றார்.காதுகேளாதோர், வாய் பேச இயலாதோருக்கு சிறப்பு பள்ளி அமைக்க எம்.எல்.ஏ.,க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment