மாற்றுத்திறனாளிகள்
வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது.
இதுபற்றி வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அளித்த விளக்கம் இங்கே...
மாற்றுத்திறனாளி முதலில் அரசு மருத்துவரிடம் மாற்றுத்திறனாளிக்கான உறுதி
சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம் குறைபாடுகள்
கொண்டவர் என்பது கட்டாயம் இருக்கவேண்டும்.?
அந்த வாகனத்தை தவிர, வேறு வாகனத்தை அவர்கள் ஓட்டக்கூடாது. மாற்றுத்திறனாளியின் கை, கால்களில் எந்த குறைபாடுகளும் இல்லாமல், காது
மட்டும் கேட்காமல் இருந்தாலும் லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. ஆனால், கருவி
பொருத்தினால் கேட்கும் திறன் இருக்கும் என்றால், அவர்களுக்கும் சில
சோதனைகள் செய்தபின்பு லைசென்ஸ் வழங்கப்படும். லைசென்ஸில் இவர்கள் காது
கேட்கும் கருவி பொருத்தியவர் என்பதும் குறிப்பிடப்படும்.
மாற்றுத்திறனாளி முதலில் அரசு மருத்துவரிடம் மாற்றுத்திறனாளிக்கான உறுதி
சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம் குறைபாடுகள்
கொண்டவர் என்பது கட்டாயம் இருக்கவேண்டும். நாற்பது சதவீதத்துக்கும் கீழ்
மாற்று திறனாளியாக இருப்பவருக்கும் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் சில
விதிகள் உண்டு.
முதலில் அவர் வாகனத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்பு ஓட்டிக்காட்ட
வேண்டும். சிக்னல் அல்லது வாகனத்தை நிறுத்த வேண்டி வந்தால், அவரால் கால்
ஊன்றி பேலன்ஸ் செய்து நிற்க முடிகிறதா? வாகனத்தின் எடையை அவரால்
தாங்கிக்கொள்ள முடிகிறதா? என்பதற்காகத்தான் இந்த டெஸ்ட்டுகள். இந்த
டெஸ்ட்டுகளில் பாஸ் ஆன பின்புதான் பழகுனர் உரிமம் வழங்கப்படும். இந்த
விதிமுறைகள் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.
நாற்பது சதவீதத்துக்கு மேல் குறைபாடுகள் உள்ள மாற்றுதிறனாளிகள், இரண்டு
சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஓட்ட விரும்பினால், அராய்
(ஏ.ஆர்.ஏ.ஐ) அனுமதி வாங்கிய நிறுவனங்களில், அவர்கள் சுலபமாக வாகனம்
ஓட்டுவதற்கு ஏற்றதுபோல எளிமையாக மாற்றங்கள் செய்து கொண்டுவர வேண்டும்.
அப்படி மாற்றி அமைத்த வாகனங்களில் கூடுதலாக ஏதாவது பாகம் அவர்கள் வசதிக்காக
சேர்த்து இருக்கலாமே தவிர, வாகனத்தில் உள்ள எந்த பாகத்தையும் நீக்கி
இருக்கக்கூடாது.
இரண்டு சக்கர வாகனங்களை அராய் அனுமதி அல்லாமல், வேறு எங்காவது மெக்கானிக்
செட்டில் மாற்றி அமைத்து வந்தால், கண்டிப்பாக அவர்களுக்கு லைசென்ஸ்
வழங்கப்பட மாட்டாது. அராய் அனுமதி வாங்கிய எந்த நிறுவனம் வாகனத்தை மாற்றி
அமைத்ததோ அந்த நிறுவனத்திடம் சான்றிதழ் பெற்று வருவது அவசியம். வாகனம்
வாங்கும்போதே மாற்றுத்திறனாளியின் பெயரில்தான் வாங்கி இருக்க வேண்டும்.
லைசென்ஸ் கொடுக்கும்போது வாகனத்தின் எண் குறிப்பிட்டுத்தான் லைசென்ஸ்
வழங்கப்படும்.
No comments:
Post a Comment