FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, June 25, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம்

25.06.2014,
கீதா பவன் டிரஸ்ட் சென்னை பகுதி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணங்களை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான திருமணங்கள் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் தங்களது திருமணமும் நடைபெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் ஜூலை 31ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். முன்பதிவிற்கான விண்ணப்பங்களை http://www.geetabhavantrust.com, http://www.hfctmatri.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tuesday, June 24, 2014

மனைவிக்காக போராடும் மாற்றுத்திறனாளி கணவர்!

திருநெல்வேலி, 24 June 2014,
திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தனது ஆசிரியை மனைவிக்கு சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத் திறனாளி கணவர் தர்னாவில் ஈடுபட்டார்.

வள்ளியூர் ஒன்றியம், வடக்கன்குளம் அருகே புதியம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்லையா மகன் நெல்சன் (53). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சு. ஆடலின் ரெஜினாபாய். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக கரூர் மாவட்டம், கரூர் வட்டாரம், அரசக்கவுண்டனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி நியமனம் கிடைத்தது.பணியில் சேர்ந்து 5 வருடமாகியும்,

Wednesday, June 18, 2014

ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

வாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாமி. 

# வாகன ஓட்டுநர் உரிமம் பெற என்னென்ன சான்றுகள் தேவை?
இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, எல்.ஐ.சி. பாலிசி சான்று, வயதுச் சான்றாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) போன்ற அரசு வழங்கிய சான்றுகள், பாஸ்போர்ட் அளவில் 3 புகைப்படங்களுடன் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெறுவதற்கு ‘படிவம் 2’-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
50 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மருத்துவச் சான்றிதழுடன் ‘படிவம் 1’-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும், இரு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 30-ம், அதனுடன் சேர்த்து நான்கு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 60-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். 

# பழகுநர் உரிமம் பெற்று எத்தனை மாதங்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெறலாம்?
பழகுநர் உரிமம் 6 மாதம் வரை செல்லுபடியாகும். பழகுநர் உரிமம் பெற்று, ஒரு மாதத்துக்கு பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஒரு மாத கால இடைவெளி, வாகனங்களை நன்றாக ஓட்டிப் பழகுவதற்காக வழங்கப்படுகிறது. பழகுநர் உரிமம் பெறும்போது, வாகனத்தை ஓட்டிக் காட்டுவதோடு சாலை விதிகள் குறித்த கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வேண்டும். 

# மாற்றுத் திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறமுடியுமா?
மாற்றுத் திறனாளிகளின் உடல் சார்ந்த பிரச்சினைக்கு ஏற்ப அவர்கள் எளிதில் இயக்கும்படி வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் இரு சக்கர வாகனங்களை இயக்க கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் பின்னால் வரும் வாகனங்களின் ஒலியைக் கேட்க இயலாது என்பதால் அவர்களது வாகனத்தின் டேஷ் போர்டு சிக்னல் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வாகனம் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளி பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மாற்றுத் திறனாளிகள் வாகன ஓட்டுநர் உரிமம் பெறலாம். 

# ஓட்டுநர் உரிமத்தின் கால அளவு எத்தனை ஆண்டுகள்?
அது வயதை பொருத்தது. ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமம் பெற்றால் அவருக்கு 40 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். பின்னர், புதுப்பிக்க 20 ஆண்டு கால அளவு வழங்கப்படும். 39 வயதில் ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற்றால் ஓர் ஆண்டு வரை- அதாவது 40 வயது வரை மட்டுமே உரிமம் வழங்கப்படும். 40 வயதுக்கு பின்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அதற்கு ரூ.250 கட்டணம். 

Monday, June 16, 2014

நாமும்உதவலாம் – பங்கேற்கலாம் - இது துவக்கம்

நாமும் உதவலாம் – பங்கேற்கலாம்
இது துவக்கம்
பெயர்: E.வசுமதி
தகப்பன்: இளங்கோவன்
விலாசம்: துவாக்குடி, திருச்சி.
பள்ளி: டாலர்ஸ் காதுகேளாதோர் பள்ளி, பொன்மலைப்பட்டி.

     பள்ளி படிப்புக்கு உதவியாக வருட கட்டணம் மொத்தம் ரூ.7200/- சங்கத்தின் சார்பில் உதவி பெற்று செலுத்தப்பட்டுள்ளது. 04.06.2014 அன்று நன்கொடை அளித்த V.சரஸ்வதி, சென்னை அவர்கள் சார்பாக சங்க நிர்வாகிகள் TARATDAC மாவட்ட செயலாளர் V.V.கிருஷ்ணமூர்த்தி, திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத் தலைவர் N.ரமேஷ்பாபு, உதவி செயலாளர் G.ராஜு ஆகியோர் பள்ளிக்கு சென்று செலுத்தி காதுகேளாத சிறுமிக்கு கல்வி கற்க உதவி செய்து ஊக்கப்படுத்தி உள்ளனர். நாம் பரவலாக நல்ல எண்ணம், உதவும் குணம் ஆர்வம் உள்ளவர்களை கண்டறிந்து மேற்படி மாணவி போல் பலருக்கு உதவிட வேண்டும்.

     உதவிட ஆர்வம் உடையவர்கள்: சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.

TARATDAC மாவட்ட செயலாளர் V.V.கிருஷ்ணமூர்த்தி 9443179508, 
email: vvktry@yahoo.com
திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத் தலைவர் N.ரமேஷ்பாபு 8754896891, email: rameshbabu6882@gmail.com

Sunday, June 15, 2014

சங்க ஆண்டு கூட்டத் தணிக்கைகள்


ஜூன் மாதம் 15ம் தேதியன்று காலை 10.00 மணியளவில் திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற  சங்கத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் இவ்வருட வரவு – செலவு கணக்கு சரி பார்த்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

Wednesday, June 11, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை

11.06.2014, புதுடில்லி: மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு, மாற்றுத்திறனாளி குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைக்காக அவர், அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவரை இடமாற்றம் செய்தால், குழந்தையின் மறுவாழ்வு நடவடிக்கைகள் பாதிக்கும். மாற்றுத்திறனாளி குழந்தைகளை கவனிக்க, அதிக செலவாகும். அத்தகைய ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்தில் இருந்து விதி விலக்கு அளிக்கலாம். அவர்கள் இடமாற்றத்தை ஏற்க மறுத்தால், அவர்களிடம் தானாக முன்வந்து பதவி விலகி விடும்படி கேட்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, மத்திய பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

கோர்ட்டில் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் கதறல்: பார்வையாளர்கள் கண்ணீர்

10.06.2014, பொள்ளாச்சி : குரூர கணவனின் கொடுமைகளை அனுபவித்து வாழ்க்கையை தொலைத்த, மாற்றுத் திறனாளி பெண் ஒருவர், பொள்ளாச்சி கோர்ட்டில் அளித்த விளக்கம், பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது.
பொள்ளாச்சி மீன்கரை ரோடு கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் அப்துல் ரகீம். இவரது மகள் சகிலா பானு,35. இவர் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரை அப்துல் ரகீமின் சகோதரி மகன் அன்வர் பாட்சாவுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். அன்வர் பாட்சா ஊட்டியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர்களுக்கு ஏழு மற்றும் ஐந்து வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறந்தவுடன் அன்வர் பாட்சா, சகிலா பானுவை மிருகத்தனமாக அடித்து உதைத்து கொடுமைப்படுத்த துவங்கியுள்ளார். சீதனமாக கொடுக்கப்பட்ட 15 பவுன் தங்க நகையையும் விற்று செலவழித்துள்ளார். சரியாக வீட்டிற்கு வராமலும், குடும்பம் நடத்த பணம் கொடுக்காமலும், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டும் பல வகைகளில் முறை தவறிய வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் தன் மகள் படும் பாட்டை காண சகிக்காத அப்துல் ரகீம், அவரை தன்னுடன் பொள்ளாச்சிக்கு அழைத்து வந்துவிட்டார்.

இது குறித்து கடந்த ஆண்டு சகிலா பானு சமூகநலத்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை பொள்ளாச்சி ஜே.எம்.,1 கேர்ட்டில் நடந்தது. மனைவியை நல்லபடியாக வைத்து பார்த்துக்கொள்ள, அன்வர் பாட்சாவை கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால் அன்வர் பாட்சா தன் மனைவியுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. இதையடுத்து அவரிடம் ஜீவனாம்சமும், சீதனமாக அளித்த 15 நகையையும் திருப்பி தரக்கேட்டு, சகிலா பானு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாய்பேச முடியாத சகிலா பானு தரப்பின் கருத்தை கேட்டறிய, கோவை ஆர்.எஸ்.,புரம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளி ஆசிரியை ஜோஸ்பின் லாரன்ஸ் மேரி உதவிக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

நீதிமன்ற விசாரணையின் போது, தான் அனுபவித்த சித்ரவதைகளையும், குழந்தைகளை வளர்க்க படும் சிரமங்களையும் அவர் சைகையில் சொல்ல சொல்ல, அது ஆசிரியையால் மொழி பெயர்த்து சொல்லப்பட்டது. இதை கண்ட பார்வையாளர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கண்கலங்கினர்.
இவ்விசாரணைக்கு சகிலா பானுவின் கணவர் அன்வர் பாட்சா நேற்று வரவில்லை. வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு (10ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டது.வயதான பெற்றோர் மற்றும் விவரம் அறியா குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளப்போராடும், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

CA juggles numbers, blazes trail with elan

 
 Click here

You can find detailed information on this job opportunity

Work with Us!
Closing Date - Monday, 16 June 2014

WFD is seeking a Development Officer join the WFD Secretariat in Helsinki, Finland.

You can find detailed information on this job opportunity below.

http://wfdeaf.org/wp-content/uploads/2014/05/WFD-Job-advertisment-for-WFD-Development-Officer-21-may-2014.pdf


Monday, June 9, 2014

சுய தொழில் துவங்க கடன் வேண்டுமா?

09.06.2014, திருப்பூர் :
சுய தொழில் துவங்க, வங்கி கடன் பெற, யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தில் விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சம் 5 லட்சம்; சேவை தொழிலுக்கு 3 லட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.
குறைந்த பட்சம் 8ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தியான தனி நபர் விண்ணப்பிக்கலாம். வயது தகுதி - பொதுப்பிரிவினர் 35; சிறப்பு பிரிவு, எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,

Sunday, June 8, 2014

உணவுப் பொருள்களை தயாரிக்க சிறப்புப் பயிற்சி

சென்னை, 08 June 2014
சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தில் ஜூன் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை உணவுப் பொருள்களையும் சிறு ரசாயனப் பொருள்களையும் தயாரிப்பதற்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அந்நிலையத்தின் கூடுதல் ஆலோசகர் எஸ்.சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உணவுப் பொருள் தாயரிப்பு பயிற்சி ஜூன் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். பயிற்சியில் துரித உணவுப் பொருள்கள், ஊறுகாய், மசாலா பொருள்கள், பதப்படுத்தப்பட்ட பழம் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் செய்யும் முறைகள் மற்றும் தரக்கட்டுப்பாடு பற்றிய விவரங்கள் அளிக்கப்படுகின்றன.

இதேபோல், மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை கிளீனிங் பவுடர், சோப்பு ஆயில், மெழுவர்த்தி, கற்பூரம், சொட்டு நீலம் உள்ளிட்ட பொருள்களைத் தயார் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுக்கும் கட்டணம் ரூ. 3000.

மேலும், இப்பயிற்சியில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், திட்ட அறிக்கை தயார் செய்யும் முறைகள், வங்கி கடன் பற்றிய விவரங்கள், விற்பனை வாய்ப்புகள் பற்றிய விவரங்கள் ஆகியவையும் அளிக்கப்படும்.

பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பயிற்சி கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. பயிற்சியின் இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 99403 18891, 97907 54446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்: அமைச்சர் வழங்கினார்

Friday, June 6, 2014

54 மாணவர்கள் வாழ்வில் 'ஒளி'

05.06.2014, கொட்டாம்பட்டி :
கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளில் உள்ள 233 கிராமங்களில் பள்ளி செல்லாத, இடை நின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கண்டறியும் முகாம் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 2 மாதங்கள் நடந்த முகாமில், இடைநின்ற 32 மாணவர்கள் மற்றும் 22 மாற்றுத் திறனாளி மாணவர்கள் புதிதாக கண்டறியப்பட்டு அவரவர் வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இப்பகுதியில் பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்து 04544- - 230 210ல் தெரிவிக்கலாம்.