FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, June 11, 2014

கோர்ட்டில் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் கதறல்: பார்வையாளர்கள் கண்ணீர்

10.06.2014, பொள்ளாச்சி : குரூர கணவனின் கொடுமைகளை அனுபவித்து வாழ்க்கையை தொலைத்த, மாற்றுத் திறனாளி பெண் ஒருவர், பொள்ளாச்சி கோர்ட்டில் அளித்த விளக்கம், பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது.
பொள்ளாச்சி மீன்கரை ரோடு கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் அப்துல் ரகீம். இவரது மகள் சகிலா பானு,35. இவர் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரை அப்துல் ரகீமின் சகோதரி மகன் அன்வர் பாட்சாவுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். அன்வர் பாட்சா ஊட்டியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர்களுக்கு ஏழு மற்றும் ஐந்து வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறந்தவுடன் அன்வர் பாட்சா, சகிலா பானுவை மிருகத்தனமாக அடித்து உதைத்து கொடுமைப்படுத்த துவங்கியுள்ளார். சீதனமாக கொடுக்கப்பட்ட 15 பவுன் தங்க நகையையும் விற்று செலவழித்துள்ளார். சரியாக வீட்டிற்கு வராமலும், குடும்பம் நடத்த பணம் கொடுக்காமலும், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டும் பல வகைகளில் முறை தவறிய வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் தன் மகள் படும் பாட்டை காண சகிக்காத அப்துல் ரகீம், அவரை தன்னுடன் பொள்ளாச்சிக்கு அழைத்து வந்துவிட்டார்.

இது குறித்து கடந்த ஆண்டு சகிலா பானு சமூகநலத்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை பொள்ளாச்சி ஜே.எம்.,1 கேர்ட்டில் நடந்தது. மனைவியை நல்லபடியாக வைத்து பார்த்துக்கொள்ள, அன்வர் பாட்சாவை கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால் அன்வர் பாட்சா தன் மனைவியுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. இதையடுத்து அவரிடம் ஜீவனாம்சமும், சீதனமாக அளித்த 15 நகையையும் திருப்பி தரக்கேட்டு, சகிலா பானு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாய்பேச முடியாத சகிலா பானு தரப்பின் கருத்தை கேட்டறிய, கோவை ஆர்.எஸ்.,புரம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளி ஆசிரியை ஜோஸ்பின் லாரன்ஸ் மேரி உதவிக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

நீதிமன்ற விசாரணையின் போது, தான் அனுபவித்த சித்ரவதைகளையும், குழந்தைகளை வளர்க்க படும் சிரமங்களையும் அவர் சைகையில் சொல்ல சொல்ல, அது ஆசிரியையால் மொழி பெயர்த்து சொல்லப்பட்டது. இதை கண்ட பார்வையாளர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கண்கலங்கினர்.
இவ்விசாரணைக்கு சகிலா பானுவின் கணவர் அன்வர் பாட்சா நேற்று வரவில்லை. வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு (10ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டது.வயதான பெற்றோர் மற்றும் விவரம் அறியா குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளப்போராடும், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment