FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, June 8, 2014

உணவுப் பொருள்களை தயாரிக்க சிறப்புப் பயிற்சி

சென்னை, 08 June 2014
சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தில் ஜூன் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை உணவுப் பொருள்களையும் சிறு ரசாயனப் பொருள்களையும் தயாரிப்பதற்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அந்நிலையத்தின் கூடுதல் ஆலோசகர் எஸ்.சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உணவுப் பொருள் தாயரிப்பு பயிற்சி ஜூன் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். பயிற்சியில் துரித உணவுப் பொருள்கள், ஊறுகாய், மசாலா பொருள்கள், பதப்படுத்தப்பட்ட பழம் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் செய்யும் முறைகள் மற்றும் தரக்கட்டுப்பாடு பற்றிய விவரங்கள் அளிக்கப்படுகின்றன.

இதேபோல், மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை கிளீனிங் பவுடர், சோப்பு ஆயில், மெழுவர்த்தி, கற்பூரம், சொட்டு நீலம் உள்ளிட்ட பொருள்களைத் தயார் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுக்கும் கட்டணம் ரூ. 3000.

மேலும், இப்பயிற்சியில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், திட்ட அறிக்கை தயார் செய்யும் முறைகள், வங்கி கடன் பற்றிய விவரங்கள், விற்பனை வாய்ப்புகள் பற்றிய விவரங்கள் ஆகியவையும் அளிக்கப்படும்.

பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பயிற்சி கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. பயிற்சியின் இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 99403 18891, 97907 54446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment