‘நீ பெரிய ஆளானதும் என்னவா ஆகணும்’ எனக் கேட்கிறார் தமிழக ராணுவ வீரர் கமலேஷ் மணி. அதற்கு உங்களைப் போல் ஆக வேண்டும் என பதிலளிக்கிறான் வாய்பேச இயலாத காது கேளாத காஷ்மீர் சிறுவன் கோஹார். இவர்களுக்குள் என்ன உறவு? 2013ஆம் ஆண்டில் ராணுவத்தில் இணைந்த திருப்பத்தூரைச் சேர்ந்த கமலேஷ் மணிக்கு 2019ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் பணி.
அங்கு டிராக்டர் ஓட்டுநருடைய ஏழைக் குடும்பத்தில் உள்ள 9 பேரில் 4 பேர் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள். அதில் ஒருவர்தான் ஓட்டுநரின் மகனான 16 வயது கோஹார் மீர். புன்சிரிப்போடு தமிழக ராணுவ வீரர் கமலேஷ் பகிர்ந்த ஒரு சாக்லேட், கோஹாரின் மனதில் இனம்புரியாத அன்பை விதைத்திருக்கிறது.
வெறும் இனிப்பு பரிமாற்றங்களோடு நின்றுவிடவில்லை இவர்களுக்கு இடையிலான உறவு. கோஹாருடைய பெற்றோரிடம் அனுமதி பெற்று சிறப்பாசியரைக் கொண்ட பள்ளியில் கோஹாரை சேர்த்திருக்கிறார் கமலேஷ்.
நாட்டின் இரு கடைக்கோடிகளைச் சேர்ந்தவர்களை இணைத்திருக்கிறது. இவர்களுக்கு இடையிலான இனம் புரியாத அன்பு. இந்த அன்பு, வார்த்தை விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டது.
No comments:
Post a Comment