FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, March 31, 2021

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு நாடகம்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நாடகத்தில் பங்கேற்ற காதுகேளாத மாற்றுத்திறனாளிகள்

15.03.2021
திருவண்ணாமலை: சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை அடுத்த சம்மந்தனூர் ரங்கம்மாள் நினைவு காதுகேளாதோர் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும் போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 18 வயது நிறைவு பெற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்கு அல்லது வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறை மற்றும் விவி பாட் இயந்திரம் மூலம் வாக்கை உறுதி செய்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் பிறகு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு குறித்த நாடகம் நடைபெற்றது. அதில், பங்கேற்றவர்களுடன் தேர்தல் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


'இது என்னோட பொண்ணு'... 'அவ வயித்துல ஒரு தீ காயம் இருக்கும் பாருங்க'... 'கண்ணீரோடு சொன்ன 71 வயது பாட்டி'... நடந்தது என்ன?


14.03.2021
சிறுவயதில் பாகிஸ்தானுக்கு வழி தவறிச் சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியாவை சோந்த வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணான கீதா கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ வழி தவறி பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். 9 வயது சிறுமியாக லாகூர் ரயில் நிலையத்தில் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக நின்று கொண்டு அழுது கொண்டிருந்த கீதாவைப் பாகிஸ்தானில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தத்தெடுத்துக் கொண்டது.

கீதா அங்கேயே வளர்ந்த நிலையில், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் முயற்சியால், கடந்த 2015-ம் ஆண்டு கீதா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரை 'இந்தியாவின் மகள்' என வர்ணித்த சுஷ்மா சுவாராஜ், அவரது குடும்பத்தைக் கண்டுபிடிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி அளித்தார்.

ஆரம்பக் காலத்தில் அவர் இந்தூரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். மேலும் அவர் கடந்த 5 ஆண்டுகளாகப் பெற்றோரைத் தேடிவந்தார். இதற்காக அவர் உத்தரப்பிரதேசம், பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சென்று இருந்தார். இதேபோல பலர் கீதாவை தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர் என உரிமை கோரினர்.

ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் மனம் தளராமல் கீதா தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் பெற்றோரைத் தேடிவந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பெற்றோரைத் தேடி மராட்டிய மாநிலம் பர்பானிக்கு வந்தார். அப்போது பர்பானி மாவட்டம் ஜின்துரை சேர்ந்த மீனா வாக்மாரே (வயது71) என்ற மூதாட்டி கீதாவைத் தனது மகள் என உரிமை கோரினார்.

மேலும் அவர் கீதாவை முதல் முறையாகப் பார்த்த போது ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மூதாட்டி கீதாவின் பெயர் ராதா எனவும் தெரிவித்தார். அதோடு மூதாட்டி கீதாவின் வயிற்றில் ஒரு தீக்காய தழும்பு இருக்கும் எனத் தன்னார்வ அமைப்பினரிடம் கூறியுள்ளார். தன்னார்வ அமைப்பினர் சோதனை செய்த போது மூதாட்டி சொல்லியது சரியாக இருந்தது.

இதையடுத்து கீதா பல கட்ட போராட்டத்திற்குப் பின்னர் தனது தாயைக் கண்டுபிடித்து விட்டார் என்றே கூறப்பட்டுள்ளது. இருப்பினும் “மீனா வாக்மாரே தான் கீதாவின் தாய் என்பதை உறுதிப்படுத்த எப்போது டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசு அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதுவரை கீதா தன்னார்வ அமைப்பில் பயிற்சி பெற்றுக் கொண்டு இருப்பார்” எனத் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே கீதா அவரது உண்மையான தாயுடன் இணைந்துவிட்டதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் மகிழ்ச்சியாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது

25.03.2021
சேலம் அருகே மாற்றுத் திறன் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் வீராணம் ஈச்சாங்காட்டு பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 30 வயது மாற்றுத் திறன் பெண்ணை, சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஐயப்பன் (36) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் சேலம் அம்மாப்பேட்டை மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி ஐயப்பனை கைது செய்தனர்.



செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மையம் :

25.03.2021
தென்காசி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க உதவி செய்வதற்கு வசதியாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தென்காசி ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் காணொலி உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சமீரன் தொடங்கிவைத்து, செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார்.

மாற்றுத் திறனாளிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக 9443621416 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குரிய சந்தேகங்களை இந்த எண்ணில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு சைகைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 வரை செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


தேர்தல் சந்தேகங்களுக்கு தீர்வு காண - மாற்றுத்திறனாளிகளுக்காக வீடியோ அழைப்பு எண் அறிமுகம் :



தி.மலை மாவட்டத்தில் 27 ஆயிரம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும்,100 சதவீதம் வாக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அவர்களது வசதிக்காக தபால் வாக்குகளும், இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நேரிடையாக சென்று வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களுக்காக, வாக்குச்சாவடி மையங்களில் சாய்வுதளம் மற்றும் சக்கர நாற்காலி வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தேர்தல் தொடர்பான சந்தேகங்களை எளிதாக தெரிந்து கொள்வதற்காக 88707 00800 என்ற கட்டணம் இல்லாத சிறப்பு வீடியோ அழைப்பு உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. இந்த எண்ணை 24 மணி நேரமும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளலாம். காது கேளாத மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வீடியோ அழைப்பில் தொடர்பு கொள்ளும்போது, அவர்களது சந்தேகங்களை, அவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ‘சைகை மொழி பெயர்ப்பாளர் கள்’ மூலம் தகவல் தெரிவிக்கப் படவுள்ளது.

இதற்கிடையில், தேர்தலில் சிரமம் இல்லாமல் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தொகுதி வாரியாக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாற்றுத் திறனாளிகள் தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.



Thursday, March 4, 2021

செவித்திறன் குறைபாடு குறித்து உலக சுகாதார மையம் எச்சரிக்கை


ஜெனீவா, 02.03.2021
இன்றைய தொழில்நுட்ப உலகில் பல்வேறு காரணங்களால் செவித்திறன் குறைபாடு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அடுத்த முப்பது ஆண்டுகளில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 1½ மடங்குக்கும் மேலாக அதிகரிக்கக் கூடும் என்றும் 2.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவிதிறன் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அதை தீர்ப்பதற்கான கவனிப்பு அணுகல் பற்றாக்குறை ஆகும். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சிகிச்சை அளிக்க குறைந்த வல்லுனர்களே உள்ளனர்.

இதுபோன்ற நாடுகளில் காது கேளாமை உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவில்லை. பணக்கார நாடுகளில் கூட, செவித்திறன் பிரச்சனையில் சிகிச்சை சீரற்றதாக இருக்கிறது.

இப்பிரச்சனை சரியாக கவனிக்கப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழக்கப்படுகிறது. பொது இடங்களில் சத்தத்தை குறைப்பதில் இருந்து காது கேளாமை மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டாா் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

 



ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்சினை : அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் தகவல்



சென்னை 03.03.2021
இந்தியாவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்சினை உள்ளது என்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறை தலைவர் கவுரி சங்கர் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ஆண்டுதோறும் மார்ச் 3-ம் தேதி ‘உலக செவித்திறன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செவித்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் கவுரி சங்கர் முன்னிலை வகித்தார். மருத்துவமனை டீன் பி.பாலாஜி, கல்லூரியின் துணை முதல்வர் ஜமிலா ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மெட்ராஸ் இஎன்டி ஃபவுண்டேஷன் இயக்குநர் மோகன் காமேஷ்வரன் ஆகியோர், பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி பொருத்துவது குறித்து விரிவாகப் பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்என்ஜே குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.சுல்தான், ஏழை குழந்தைகளுக்கு பொருத்துவதற்காக தலா ரூ.10 ஆயிரம் மதிப்புடைய 100 காது கேட்கும் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கினார்.

காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் கவுரி சங்கர் பேசும்போது, “இந்தியாவில் காது கேளாமை பிரச்சினை அதிகரித்து வருகிறது. பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே காது கேளாமை பிரச்சினை உள்ளது. ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி பொருத்துவதன் மூலம் அந்த குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனை கொண்டு வரலாம். பின்னர் பேச்சு பயிற்சியின் மூலம் குழந்தைகள் பேசத் தொடங்கிவிடும்” என்றார்.