25.03.2021
தென்காசி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க உதவி செய்வதற்கு வசதியாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தென்காசி ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் காணொலி உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சமீரன் தொடங்கிவைத்து, செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார்.மாற்றுத் திறனாளிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக 9443621416 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குரிய சந்தேகங்களை இந்த எண்ணில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு சைகைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 வரை செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment