100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நாடகத்தில் பங்கேற்ற காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் |
15.03.2021
திருவண்ணாமலை: சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை அடுத்த சம்மந்தனூர் ரங்கம்மாள் நினைவு காதுகேளாதோர் பள்ளியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும் போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 18 வயது நிறைவு பெற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்கு அல்லது வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறை மற்றும் விவி பாட் இயந்திரம் மூலம் வாக்கை உறுதி செய்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் பிறகு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு குறித்த நாடகம் நடைபெற்றது. அதில், பங்கேற்றவர்களுடன் தேர்தல் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment