சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றவர்களுக்கான பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அருள் பெமினா (வயது 55) என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
கன்னியாஸ்திரியான இவர், அந்த பள்ளியிலேயே தங்கி இருந்து, கடந்த 2 ஆண்டுகளாக மன அழுத்தத்துக்கான சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் தான் தங்கிருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த தேனாம்பேட்டை போலீசார், அருள் பெமினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் அறையில் இருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் அவர், “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மன அழுத்தம் காரணமாக இரவில் தூக்கம் வராததால் தற்கொலை செய்து கொள்கிறேன்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment