06.07.2021 நாகப்பட்டினம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் என 12 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் 28 பேருக்கு ஸ்மார்ட் போன்கள், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம், ஒருவருக்கு விபத்து மரணத்துக்கான உதவித்தொகை ரூ.1 லட்சத்துக்கான காசோலை என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.5.24 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரண உதவிகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ய
No comments:
Post a Comment