FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, April 14, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர்: வாய் பேச முடியாத மனைவியிடம் பாலியல் சீண்டல்... புகார் அளித்த கணவர் குத்திக்கொலை

 


ஸ்ரீவில்லிபுத்தூரில் வாய் பேச முடியாத மனைவியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட கணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் போலீஸார், 'விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வழக்கறிஞரிடம் குமஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். மாரிமுத்துவுக்கு, வாய் பேசமுடியாத மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில், கொளூர்பட்டியை சேர்ந்த வினோத் (30) என்பவர், மாரிமுத்துவின் மனைவியிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் வினோத் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மாரிமுத்து தனது வீட்டிலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் கைகாட்டி கோயில் பஜாருக்கு நடந்து வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஐந்து கடை அருகே, மறைந்திருந்த வினோத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், குடல் சரிந்து மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளி வினோத் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நகர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், மாரிமுத்துவின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் நகர் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வினோத்தை தேடிப்பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர்' என்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment