FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, May 11, 2024

மரபணு சிகிச்சைக்குப் பிறகு செவித்திறன் பெற்ற சிறுமி @ பிரிட்டன்



10.05.2024 கேம்பிரிட்ஜ்: செவித்திறன் இல்லாமல் பிறந்த 18 மாத சிறுமி ஒருவருக்கு நவீன மரபணு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அவர் செவித்திறன் பெற்றுள்ளார்.

இந்த சிகிச்சையின் மூலம் இயல்பானவர்கள் பெற்றுள்ள செவித்திறன் அளவுக்கு மிக நெருக்கமான நிலைக்கு அந்த சிறுமியின் செவித்திறன் செயல்பாடு அமைந்துள்ளதாக காது அறுவை சிகிச்சை நிபுணர் மனோகர் பான்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஒபல் சான்டி. பிறந்து 18 மாதமான அவருக்கு ஆடிட்டரி நியூரோபதி என்ற பாதிப்பின் காரணமாக காதில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பில் பாதிப்பு இருந்துள்ளது. இந்த பாதிப்பு காரணமாக செவித்திறன் இல்லாமல் அவர் பிறந்தார்.

இந்த சூழலில் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள அடன்புரூக்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்குதான் அவருக்கு இந்த மரபணு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனோகர் பான்ஸ் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த சிகிச்சையின் முடிவுகள் தாங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறந்த முடிவுகளை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வகை மரபணு சிகிச்சையின் மூலம் செவித்திறன் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான ரீஜெனெரானால் இந்த மரபணு சிகிச்சை முறையை வடிவமைத்ததாக மனோகர் பான்ஸ் தெரிவித்துள்ளார். இதே முறையின் கீழ் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த சிகிச்சையின் கீழ் செவித்திறன் பெற்ற உலகின் முதல் நபராக ஒபல் இருப்பதாக மனோகர் பான்ஸ் சொல்கிறார். மேலும், இந்த சிகிச்சையை பெற்ற உலகின் இளம் வயது நபரும் ஒபல் தான் என அவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment