FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, May 11, 2024

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்.. சைகையில் அன்பு பரிமாறிய நெகிழ்ச்சி!



26.04.2024, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம். சைகை மொழியில் அன்பு பரிமாறிய நெகிழ்ச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெரியக்கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவர், பிறவியிலேயே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

இவருக்குத் திருமணத்துக்காக பெண் கிடைக்காமல் பெற்றோரும், உற்றாரும், ஊர் மக்களும் பல ஆண்டுகளாக பெண் தேடும் வேளையில் இறங்கி இருந்தனர்.

இந்த நிலையில், மகாத்மா காந்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சுயம்வரம் நிகழ்ச்சி மூலம், மகாலட்சுமியின் குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்தது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமியும் பிறவியிலேயே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

சுயம்வரம் நிகழ்ச்சியில் நாராயணனுக்கும், மகாலட்சுமிக்கும் திருமண பந்தம் உறுதி செய்யப்பட்டு, பின்னர் நிச்சயதார்த்தமும் நடந்தது இதனைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் அருகே மேலத்தாழனூரில் உள்ள குலதெய்வமான பச்சையம்மன் கோயிலில், இருவீட்டார் முன்னிலையில் இன்று நாராயணனுக்கும், மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்தது.

இதையடுத்து, திருமணம் முடிந்து மணமக்கள் கோயிலை சுற்றி வலம் வந்தபோது, வாய்பேச் 'முடியாத நாராயணனும், மகாலட்சுமியும் சைகை மொழியில் அன்பாக பேசிக்கொண்டது, இரு வீட்டாரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. மேலும், அங்கிருந்த மக்களும் மணமக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.



No comments:

Post a Comment