27.02.2025
அரியாங்குப்பம்; தளவக்குப்பத்தில் காது கேளாதோர் விளையாட்டு கழகம் சார்பில், 5வது சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.தவளக்குப்பம் அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு, பாஷித் தலைமை தாங்கினார். சத்தியபுவன் முன்னிலை வகித்தார். விளையாட்டு துறை இணை இயக்குனர் வைத்தியநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, நிறைவாக ஓட்ட போட்டியில் வெற்றி பெற்ற விவேகன், வசீகரன், சஞ்சுவேல், ஐயப்பன், லாவண்யா, காவியா, சத்யா மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவர் வித்யா, வாஸ்கோ நிறுவன உரிமையாளர் ஆனந்த், டேப் எனபில் பவுண்டேஷன் மேலாளர் ஞானவேல், அசோக்குமார், உடற்பயிற்சி ஆசிரியர் ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.