27.03.2025
காஞ்சிபுரத்தில் செவித்திறன் குறைபாடுடைய சிறாா்களுக்கான கல்விச் சுற்றுலா வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்து சிறுவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனா். நிகழாண்டு 0 முதல் 6 வயதுடைய ஆரம்ப கால பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறைபாடுடைய 20 மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவா்களது பெற்றோரின் துணையுடன் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு திரும்ப அழைத்து வரப்பட உள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய கல்விச் சுற்றுலா வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அப்போது அவா் சிறாா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
No comments:
Post a Comment